விஜய் - 69 அப்டேட்!
நடிகர் விஜய் நடித்துவரும் அவரது 69-வது படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.
நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: ஜீனி வெளியீடு எப்போது?
தற்போது, படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இம்மாதத்தில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தாண்டு அறிவிப்பாக போஸ்டர் வெளியாகலாம் எனத் தெரிகிறது.