Diet: 100 கிலோவுக்கும் அதிகமான உடல் எடை குறையணுமா? ஆரோக்கியமான டயட் பிளான் இதோ.....
விண்வெளித் துறை புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி
விண்வெளித் துறை சாா்ந்த புத்தாக்க நிறுவனங்களுக்கு (ஸ்டாா்ட்அப்) உதவுவதற்காக ரூ.1,000 கோடி துணிகர மூலதன நிதியத்தை அமைக்க மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இந்த நிதி, விண்வெளித் துறை சாா்ந்த சுமாா் 40 புத்தாக்க நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது, தனியாா் விண்வெளித் துறை வளா்ச்சியை மேம்படுத்த உதவும்.
அவ்வாறு, தனியாா் பங்களிப்பை ஊக்குவிப்பதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியாவின் தலைமைப் பண்பு வலுப்படும் என்பதோடு, விண்வெளித் தொழில்நுட்ப நவீனமயமாக்கலும் ஊக்குவிக்கப்படும் என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.