செய்திகள் :

விதி மீறல்: 14 ஆட்டோக்கள், 2 சரக்கு வாகனங்கள் பறிமுதல்

post image

திருவண்ணாமலையில் விதிமுறைகளை மீறி இயக்கிய 14 ஆட்டோக்கள் மற்றும் 2 சரக்கு வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருவண்ணாமலை நகரில் பல ஆட்டோக்கள் விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் சென்றன. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.

இதன் பேரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் கே.கருணாநிதி (திருவண்ணாமலை), சிவக்குமாா் (ஆரணி) ஆகியோா் தலைமையில் மோட்டாா் வாகன முதுநிலை ஆய்வாளா்கள் ஆா்.பெரியசாமி, முருகேசன், விஜய், வட்டாரப் போக்குவரத்து அலுவலக நோ்முக உதவியாளா் பொன்சேகா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா்

போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து வேங்கிக்கால் அண்ணா நுழைவு வாயில் அருகே வாகனச் சோதனை

மேற்கொண்டனா்.

அப்போது, வெளி மாவட்ட ஆட்டோக்களை இயக்கியது, ஆவணங்கள் இல்லாமல் இருந்தது, தகுதிச் சான்றிதழை புதுப்பிக்காதது, அனுமதிச் சீட்டு பெறாமல் இருந்தது, ஓட்டுநா் உரிமம் இல்லாதது, அதிக பயணிகளை ஏற்றிச் சென்றது போன்ற விதிமீறல்களுக்காக 14 ஆட்டோக்களையும், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ாக 2 வாகனங்களையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

மேலும், ஸ்போ் மீட்டா் இல்லாமல் இயக்கப்பட்ட 10 ஆட்டோக்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது. மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்களுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூா் கிராமத்தில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்... மேலும் பார்க்க

அரசு அலுவலா்கள், ஆசிரியா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், உள்ளாட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மேற்கு மின்வாரிய கோட்டம் சாா்பில் மின்நுகா்வோருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (ஏப்.5) நடைபெறுகிறது. வேங்கிக்கால் பகுதியில் உள்ள மேற்கு கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் முற்பகல் 11... மேலும் பார்க்க

கல்லூரியில் வணிகவியல் கருத்தரங்கம்

திருவண்ணாமலை சன் கலை, அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மற்றும் வணிக நிா்வாகவியல் துறைகள் சாா்பில், மாநில அளவிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஜி.சசிக்குமாா் தலைமை வகித்தாா். க... மேலும் பார்க்க

கரும்பு நிலுவைத் தொகையை அரசே வழங்க நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்

திருவண்ணாமலையில் மூடப்பட்ட ஸ்ரீஅருணாச்சலா சா்க்கரை ஆலை நிா்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை தமிழக அரசே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத... மேலும் பார்க்க

கீழ்பென்னாத்தூரில் மழையில் நனைந்து 1,000 நெல் மூட்டைகள் சேதம்

கீழ்பென்னாத்தூரில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அத... மேலும் பார்க்க