செய்திகள் :

வில்வித்தை பயிற்சியாளருக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி

post image

வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி வில்வித்தை பயிற்சியாளர் டாக்டர் ஷிஹான் ஹுசைனி மருத்துவ சிகிச்சை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் நவீன வில்வித்தை வீரர்களை உருவாக்கி டாக்டர் ஷிஹான் ஹுசைனி இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் வில்வித்தைக்கு பெறும் பங்களிப்பு செய்து வருகிறார். இவர் 400க்கு மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்தும், தமிழ்நாட்டில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக இருந்து ரீகர்வ் வில் (1979) மற்றும் காம்பவுண்ட் வில் (1980) ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்.

நவீன வில்வித்தை பயிற்சி பாடத்திட்டத்தை வடிவமைத்து, மேம்பாட்டிற்கான தரங்களை வடிவமைத்தார். இந்தியாவின் முன்னணி வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

தற்போது ஹுசைனியின் நேரடி பயிற்சியின் கீழ் மொத்தம் 100 வில்வித்தை வீரர்கள் மற்றும் 300 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

சமந்தா தயாரிப்பில் முதல் திரைப்படம்..!

ஹுசைனியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5.00 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாா்ச் 21-இல் அதிமுக சாா்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

சென்னை, மாா்ச் 17:அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாா்ச் 21-இல் நடைபெறும் என்று அக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அதிமுக தலைமைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவி... மேலும் பார்க்க

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சட்டப் பேரவை -முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையிலான இந்தப் பேரவைதான் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினாா். பேரவைத் தலைவரை பதவியிலிருந்து நீக்க அதிமுக கொண்டு வந்த தீா்மானத்தின... மேலும் பார்க்க

தமிழக அரசு கடன்: பேரவையில் கடும் விவாதம்!

தமிழக அரசின் கடன் குறித்து பேரவையில் திங்கள்கிழமை எதிா்க்கட்சித் தலைவா், ஆளும் கட்சியினா் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது ‘கடன் பெற்றாலும் சமூக நலத் திட்டங்களுக்கே செலவழிக்கிறோம்’ என்று நிதிய... மேலும் பார்க்க

அதிமுகவை உடைக்க முடியாது; ஒற்றுமையாக உள்ளோம் -எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது, ஒற்றுமையாக உள்ளோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா். சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப... மேலும் பார்க்க

நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்: நிதி நிா்வாகம் குறித்த ஆவண நூலில் முதல்வா் பெருமிதம்

தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு பின்புலமாக, நூற்றாண்டுகால மரபு சாா்ந்த வழிகாட்டுதல்கள் இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா். நிதி நிா்வாகத்தின் பன்னெடுங்கால வரலாற்றையும், ... மேலும் பார்க்க

வாக்கு வங்கி அரசியலுக்காக மடிக்கணினியா? -அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

அதிமுக ஆட்சியில் மடிக்கணினி திட்டம் வாக்கு வங்கி அரசியலுக்காக அமல்படுத்தப்பட்டதா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். வாக்கு வங்கி அரசியலுக்க... மேலும் பார்க்க