செய்திகள் :

`விழுப்புரம் டு அரியலூர்'- கர்ப்பிணியின் அரிய வகை ரத்த மாதிரி; ரயிலில் கொண்டு சேர்த்த இளைஞர்

post image
சில தினங்களுக்கு முன், அரியலூரை சேர்ந்த ஹேமாவதி (27)என்ற கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்க்க அரியவகை ரத்தமான OH+ve ரத்தம் தேவைப்பட்டது .இந்த செய்தியானது ரத்த தானம் செய்யும் குழுக்களில் பகிரப்பட்டு, OH பாசிட்டிவ் ரத்த தானம் செய்யும் கொடையாளர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் OH பாசிட்டிவ் ரத்தம் ,ரத்த வங்கியில் இருந்ததாகத் தெரியவந்தது. இந்த ரத்தம் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியின் மருத்துவர் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக அரியலூர் மருத்துவமனைக்கு விரைந்து எடுத்து செல்லப்பட்டது. பின் அந்த கர்ப்பிணிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இத்தகைய மனித நேயம் மிக்க செயல் குறித்து விளக்கம் அளித்த தன்னார்வலர் மற்றும் மனிதம் காப்போம் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சந்துரு,"பாம்பே ரத்தம் என்பது மிகவும் அரிதான ரத்தம். இந்த வகை ரத்தம் லட்சத்தில் ஒருவருக்கு மட்டும் தான் இருக்கும். பொதுவாக ரத்த தான முகாம்களில் தான் இவ்வகையான ரத்தம் கண்டுபிடிக்கப்படும். முதலில் இந்த வகை ரத்தத்தினை ஓ பாசிடிவ் ரத்தம் என குறிப்பிட்டு ரத்த தான முகாம்களில் இருந்து எடுத்துக் கொள்வர் .பின் ரத்த வங்கியில் மறுபரிசீலனை செய்யும் போது தான் OH+ve ரத்தம் என கண்டறிவார்கள். இந்த ரத்தத்தினை 39 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம் .அரியலூரைச் சேர்ந்த சகோதரிக்கு முதல் பிரசவத்தில் பெரிதும் ரத்தம் தேவைப்படவில்லை. ஆகையால் அவர்களின் ரத்தத்தை பரிசோதிக்கவில்லை. தற்போது இரண்டாவது பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை செய்வதற்காக ரத்தம் தேவைப்படுகிறது என பரிசோதத்த பின்பு தான் தெரிந்தது அவர்களுக்கு அரிய வகை ரத்தமான OH பாசிட்டிவ் என்று.

பொதுவாகவே நமது உடலில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு 12.5mg/dl . உடலில் இந்த அளவைவிட ஹீமோகுளோபின் குறைந்தால் நமது உடலுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்வதற்கு அருகில் இருக்கும் மருத்துவமனையில் OH பாசிட்டிவ் ரத்தத்தின் இருப்பு குறித்து விசாரித்ததில், விழுப்புரம் மாவட்டம் முண்டம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இருப்பதாகத் தெரியவந்தது. இதையடுத்து அரியலூர் மருத்துவமனையில் இருந்து OH பாசிட்டிவ் ரத்தத்தின் தேவை குறித்தும் அச்சகோதரியின் விபரங்கள் குறித்தும் விழுப்புரம் மருத்துவமனையின் ரத்தம் வங்கிக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து OH பாசிட்டிவ் ரத்தத்தினை முதலில் பேருந்து மூலமாக அனுப்பி வைக்கலாம் என்று எண்ணினோம். ஆனால் ரத்தம் மிக அவசரமாகத் தேவைப்பட்டதால் ரயில் மூலமாக அனுப்பி வைக்கலாம் என்று பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக அந்தக் கொட்டும் மழையிலும் எடுத்துச் சென்றோம். குறித்த நேரத்திற்குள் அரியலூர் மருத்துவமனைக்கு ரத்தம் கொண்டு செல்லப்பட்டது. இவ்வாறான ட்ரான்ஸ்போர்ட்டிற்கு நாங்கள் மிகவும் உதவுகிறோம். நான் சிப்டோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிகிறேன். கடந்த ஆண்டு என் .ஐ .பி மூலம் அரங்கேறிய தேசிய அளவிலான கூட்டத்தில் கலந்துகொண்டு இரத்தம் சார்ந்த நிறைய செய்திகளை அறிந்துகொண்டேன் இதனால் என்னால் இதுபோன்ற ரத்தம் சார்ந்த தேவைக்கு நேரடியாக உதவ முடிகிறது .விழுப்புரம் மருத்துவமனையில் 14 வகையான ரத்தப் பரிசோதனை செய்தபிறகு ,அதனை பாதுகாப்பாக அரியலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். இதுவரையில் 8 முறை இவ்வாறு ட்ரான்ஸ்போர்ட் செய்திருக்கிறோம். அவசர தேவை என்றதும் ரத்த கொடையாளர்களை தேடி கண்டறிய முடியாது. ஆகையால் இணையதள செயலி மூலமாகக் கண்டறிந்து... ரத்தத்தைத் தேவைப்படுபவர்களுக்கு அனுப்பி வைப்போம்."

இந்தியாவின் முதல் “லங்-லைஃப்” ஸ்க்ரீனிங் செயல்திட்டத்தை அறிமுகம் செய்யும் அப்போலோ கேன்சர் சென்டர்

நுரையீரல் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சையை வழங்குவதில் இந்தியாவில் முதன்மை வகிக்கும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACCs), நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்காக இந்தியாவின் முதல் லங்-லைஃப் ஸ்... மேலும் பார்க்க

Health: இரத்தப்போக்கு கண் வைரஸ்...எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

மார்பர்க் வைரஸ் (marburg) அல்லது 'ரத்தப்போக்கு கண் வைரஸ்' என்று அழைக்கப்படுகிற புதிய வைரஸ் ஒன்று, உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து மற்றும் ஆப்பிரிக்காவிற்கு செல்லும் பயணிக... மேலும் பார்க்க

மொரோக்கோவில் நோயாளி; சீனாவில் மருத்துவர் - 12,000 கிலோமீட்டர் இடைவெளியில் ரோபோ மூலம் அறுவை சிகிச்சை!

சீனாவின் ஷாங்காயில் இருந்து 12000 கி.மீ தூரத்தை கடந்து மொரோக்கோவில் ரோபோவை பயன்படுத்தி ரிமோட் புரோஸ்டேட் புற்றுநோய் அறுவை சிகிச்சையை, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மருத்துவர் செய்து முடித்துள்ளனர்.30000 கில... மேலும் பார்க்க

Rainy Season: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க; 10 வகையான மூலிகைத் தேநீர் - செய்முறை விளக்கம்

துளசி டீமூலிகை டீதேவையானவை: துளசி இலைகள் - 10 - 20, ஏலக்காய் - 4, சுக்கு - அரை அங்குலத்துண்டு, தேன் - 2 டீஸ்பூன், பால் - கால் கப்.செய்முறை: துளசி இலைகள், ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை நன்கு நசுக்கி, ஒரு ... மேலும் பார்க்க

Push-Ups: `Age is Just a Number'- 59 வயதில் 1 மணி நேரத்தில் 1575 புஷ்அப்ஸ் எடுத்து சாதனை படைத்த பெண்

கனடாவைச் சேர்ந்த டோனா ஜீன் என்ற 59 வயதான பெண், ஒரு மணி நேரத்தில் 1575 முறை புஷ்அப்ஸ் (Push-Ups) எடுத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். உலகிலேயே ஒரு மணி நேரத்தில் அதிக முறை புஷ்அப்ஸ் எடுத்த பெண் என்ற... மேலும் பார்க்க

Hande Hospital: மைக்ரோவேவ் அபிலேஷன் மற்றும் லேசர் அறுவை சிகிச்சை மையத்தின் திறப்பு விழா

நவம்பர் 28, 2024-ல் மருத்துவம் மற்றும் பொது சேவையில் முன்னோடியான டாக்டர் எச்.வி. ஹண்டே அவர்களின் 98வது பிறந்த நாள், ஹண்டே மருத்துவமனை ஷெனாய் நகர், 44, லட்சுமி டாக்கீஸ் ரோடு, சென்னை – 600030-ல் கொண்டாட... மேலும் பார்க்க