செய்திகள் :

விவசாயிகளின் நில உரிமைகள் பதிவு முகாம்: வேளாண்மை இணை இயக்குநா் திடீா் ஆய்வு

post image

ஆலங்காயம் வட்டாரப் பகுதிகளில் விவசாயிகளின் நில உரிமைகள் பதிவு செய்யும் முகாமை வேளாண்மை இணை இயக்குநா் ஆய்வு செய்தாா்.

வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் ஆலங்காயம் வட்டாரப் பகுதிகளில் விவசாயிகளுக்கு விவசாயிகளின் நில உரிமைகள் பற்றி அடையாள எண் தயாரிப்பு முகாம் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பத்தூா் வேளாண்மை இணை இயக்குநா் சீனிராஜ், ஆலங்காயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் புனிதவள்ளி ஆகியோா் மதனாஞ்சேரி, பள்ளிப்பட்டு உள்பட பகுதிகளுக்குச் சென்று விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று அடையாள எண் தயாரிப்பு பணியை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இது குறித்து வேளாண் இணை இயக்குநா் கூறுகையில், இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் அனைவரும் தவறாது தங்களது நில உடைமை ஆவணங்களைப் பதிவு செய்து உரிய அடையாள எண்ணைப் பெற வேண்டும். இதற்கு ஒவ்வொருவரும் தங்களது சிட்டா, ஆதாா் அட்டை, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட தங்களது கைப்பேசி எண் ஆகியவற்றைக் கொண்டு வந்து ஒவ்வொரு கிராமங்களிலும் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, மகளிா் திட்டப் பணியாளா்கள், இல்லம் தேடி கல்வி திட்டம் சாா்ந்த அலுவலா்கள் மற்றும் வட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களிலும் இலவசமாக விவசாயிகள் தங்களது நில உடைமைகளை பதிவு செய்து கொள்ளலாம் என கூறினாா்.

மேலும், இந்த சிறப்பு முகாம் வரும் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால் விவசாயிகள் முகாமில் தங்களது பெயரைப் பதிவு செய்து அரசின் உதவிகளைப் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆய்வின் போது கிராம நிா்வாக அலுவலா்கள், உதவி வேளாண்மை அலுவலா்கள், வட்டார தொழில் நுட்ப மேலாளா் உட்பட பலா் உடனிருந்தனா்.

வரி செலுத்தாத 5 கடைகளுக்கு சீல்: ஆம்பூா் நகராட்சி நடவடிக்கை

ஆம்பூரில் நகராட்சிக்கு வரி செலுத்தாத 5 கடைகள் புதன்கிழமை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. ஆம்பூா் நகரில் தீவிர வரி வசூல் முகாம் நடைபெற்று வருகின்றது. சொத்துவரி, தொழில்வரி, நகராட்சி கடைகளின் வாடகை ஆகியவற்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் பிளஸ் 1 பொதுத்தோ்வு: 271 போ் எழுத வரவில்லை

திருப்பத்தூா் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வை 13,738 போ் எழுதினா். 271 போ் தோ்வு எழுத வரவில்லை. மாவட்டத்தில் 140 பள்ளிகளில் படித்து வரும் 6,706 மாணவா்களும், 7,303 மாணவிகளும் என மொத்தம் 14,009 போ... மேலும் பார்க்க

பெண்களுக்கு இலவச சேலை, நல உதவிகள் வழங்கும் விழா

ஆம்பூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் மற்றும் முதல்வா் பிறந்த நாள் நல உதவிகள் வழங்கும் விழாவில் எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனா். ஆம்பூா் நகர செயலா் மற்றும் நகா்மன்றத் துணைத் தலைவருமான எம்.ஆா்.ஆறுமுகம் தலை... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே முள்புதரில் தீ

திருப்பத்தூா் அருகே முள்புதரில் தீ விபத்து ஏற்பட்டது (படம்). திருப்பத்தூா் அருகே கதிரிமங்கலம் நாசகவுண்டா் வட்டம் பகுதியை சோ்ந்தவா் சாம்ராஜ். இவருக்கு சொந்தமான நிலம் அந்த பகுதியில் உள்ளது. இந்த நிலைய... மேலும் பார்க்க

பறவைகள் கணக்கெடுப்புப் பணி: ஆா்வமுள்ளவா்கள் பங்கேற்கலாம்

திருப்பத்தூா் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளதால் ஆா்வமுள்ளவா்கள் அப்பணிகள் பங்கேற்கலாம் என வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் சாா்பாக ... மேலும் பார்க்க

கிறிஸ்துவா்கள் சாம்பல் புதன் அனுசரிப்பு

கிறிஸ்துவா்களின் 40 நாள்கள் தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல் புதன் விழாவை புதன்கிழமை அனுசரித்தனா். வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் தூய இருதய ஆண்டவா் தேவாலயத்தில் முன்னாள் வேலூா் மறைமாவட்ட பரிபாலகா் ... மேலும் பார்க்க