செய்திகள் :

விவசாய சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு!

post image

தில்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் புதன்கிழமை பிற்பகலில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் முழுவதும் நாளை பகல் 12 முதல் 3 மணி வரை அனைத்து ரயில்களையும் விவசாயிகள் நிறுத்த வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவர் சர்வன் சிங் பாந்தர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிக்க : ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

வேளாண் பயிா்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

பஞ்சாப்-ஹரியாணா எல்லையான ஷம்புவிலிருந்து டிச. 14ஆம் தேதி மூன்றாவது முறையாக சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தில்லி நோக்கி நடைபயணத்தை மேற்கொண்டனர். அப்போது விவசாயிகளை தடுத்து நிறுத்திய ஹரியாணா காவல்துறை, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதில் காயமடைந்த விவசாயிகள் டிராக்டரில் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனிடையே, 20 நாள்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜித் சிங் தலேவா உடல்நிலை மோசமடைந்துள்ளார்.

இந்த நிலையில், ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்த சர்வன் சிங் பேசியதாவது:

“நேற்று வாகனப் பேரணிக்கு ஆதரவளித்த அனைத்து விவசாயிகளுக்கும் நன்றி. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜக்ஜித் சிங் தலேவாவின் உடல்நிலை மோசமாக உள்ளது. அவருக்கு ஏதேனும் நேரிட்டால் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

மோடி அரசு பிடிவாதமாக இருக்கிறது. எங்களின் கோரிக்கைகளை நசுக்குவதில் வெற்றி பெறுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் சேர்ந்து விவசாயிகளின் குரலை நசுக்குகிறார்கள்.

நாளை பகல் 12 முதல் 3 மணி வரை ரயில் மறியல் போராட்டத்துக்கு பஞ்சாப் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இம்ரான் கானின் இடைக்கால ஜாமீன் ஜன.7 வரை நீட்டிப்பு!

இரண்டாவது தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபியின் இடைக்கால ஜாமீனை ஜனவரி 7 வரை நீட்டித்து பாகிஸ்தான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. 72 வயதான முன்னாள் கிரிக்கெட் ... மேலும் பார்க்க

'ராமரின் பாரம்பரியங்களால்தான் இந்தியா இயங்கும்; பாபரால் அல்ல'- யோகி ஆதித்யநாத்

ராமரின் பாரம்பரியங்களால்தான் இந்தியா இயங்கும், பாபரால் அல்ல என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். சம்பல் வன்முறை தொடர்பாக உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவையில் நேற்று விவாதம் நடைப... மேலும் பார்க்க

கணினி வழியில் ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும்: மத்திய அரசு

என்சிஇஆர்டி பாடப் புத்தகங்கள் ஃபிளிப்கார்ட், அமேசான் தளங்கள் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யப்படவுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று(டிச. 17) தெரிவித்துள்ளார்.பொறியியல் படிப்புக... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் முதல்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்!

நாடாளுமன்றத்தில் முதல்முறையாக வாக்கெடுப்புக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் ப... மேலும் பார்க்க

கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா!

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப மக்களவையில் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெறப்பட்டது.மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில... மேலும் பார்க்க

புத்த கயாவில் இலங்கை அதிபர் வழிபாடு!

பிகாரின் புத்த கயாவில் உள்ள மகாபோதி கோயிலில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக வழிபாடு மேற்கொண்டார். தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மீனவர்கள் பிரச்னை, இலங்கை தமிழர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவக... மேலும் பார்க்க