செய்திகள் :

விவாகரத்துதான் தீர்வு? -சிரியா முன்னாள் அதிபரின் மனைவி

post image

சிரியாவைவிட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சமடைந்துள்ள அந்நாட்டின் முன்னாள் அதிபரின் மனைவி விவாகரத்து கோரியுள்ளார்.

சிரியா முன்னாள் அதிபர் பஷார் அல் அசாத்தின் மனைவி அஸ்மா அல் அசாத், ரஷிய நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். விவாகரத்து கிடைத்தபின் அவர் மாஸ்கோவிலிருந்து லண்டனுக்கு குடிபெயரவும் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் சிரியா மட்டுமல்லாது பிரிட்டன் குடியுரிமையையும் பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரியாவை பூர்வீகமாகக் கொண்ட இவரது பெற்றோர் லண்டனில் வசித்து வந்த நிலையில், இவர் தனது இளமைப் பருவத்தை லண்டனில் கழித்தவர். அங்கு அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, லண்டனில் கல்வி பயில வந்த பஷார் அல் அசாத்துடன் காதல் வசப்பட்ட இவர், கடந்த 2000-ஆம் ஆண்டு தனது 25-ஆம் வயதில் பஷார் அல் அசாத்தை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 வாரிசுகள் உள்ளனர்.

இந்த நிலையில், மாஸ்கோவில் தன்னால் வாழப் பிடிக்கவில்லை என்பதால் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்ட நிலையில், கடந்த மே மாதம் ரத்த தட்டணுக்கள் உறைதல் பிரச்சினைக்காகவும் சிகிச்சை எடுத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தனது சிறு வயது பருவத்தை லண்டனில் கழித்த அவர், மீண்டும் அங்கே செல்ல இப்போது ஆயத்தமாகி வருகிறார்.

இந்த தகவலை முற்றிலும் நிராகரித்துள்ளது ரஷிய அரசு. அந்நாட்டின் அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் இவ்விவகாரம் குறித்து பேசுகையில், “அப்படியெதுவுமில்லை, இந்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை” எனத் தெரிவித்துள்ளார்.

ஹோண்டாவுடன் இணைகிறது நிஸ்ஸான்!

டோக்கியோ: கார் உள்ளிட்ட ஆட்டோமொபைல் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் ஹோண்டாவுடன் நிஸ்சான் நிறுவனம் இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(டிச. 23) ... மேலும் பார்க்க

அமெரிக்க ஏஐ ஆலோசகராக சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்!

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணரும், தொழில்முனைவோருமான ஸ்ரீராம் கிருஷ்ணன் அமெரிக்க செய்யறிவு கொள்கை ஆலோசகராக நியமித்து உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபராக பதவியேற்கவிருக்கும் ட... மேலும் பார்க்க

சொந்த போா் விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்: விமானி காயம்

செங்கடலில் சொந்த நாட்டு போா் விமானத்தை அமெரிக்க போா்க் கப்பல் தவறுதலாக ஞாயிற்றுக்கிழமை சுட்டு வீழ்த்தியதில் விமானி ஒருவா் காயமடைந்தாா். பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேல், ஹமாஸ் படையினா் இடையே போா் ... மேலும் பார்க்க

தைவானுக்கு ராணுவ உதவி: அமெரிக்காவுக்கு சீனா எதிா்ப்பு

தைவானுக்கு ராணுவ உதவியை அறிவித்த அமெரிக்காவுக்கு எதிா்ப்பு தெரிவித்த சீனா, அமெரிக்கா நெருப்போடு விளையாடுவதாக எச்சரித்துள்ளது. தைவான் பாதுகாப்புத் துறை சேவைகள், ராணுவக் கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றுக... மேலும் பார்க்க

போா்கள் நிறுத்தப்பட வேண்டும்: போப் ஃபிரான்சிஸ்

உலகில் நடைபெறும் போா்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை தலைவா் போப் ஃபிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா். இதுதொடா்பாக இத்தாலியின் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டா் தேவாலயத்தில்... மேலும் பார்க்க

நைஜீரியா: கூட்ட நெரிசலில் 32 போ் உயிரிழப்பு

நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது நோ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 32 போ் உயிரிழந்தனா். நைஜீரியாவின் ஒகிஜா பகுதியில் உள்ள தேவாலய வளாகத்தில், கிறிஸ்த... மேலும் பார்க்க