விவசாயிகளுக்கு ரூ. 41,000 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது: குடியரசுத் தலைவர் உ...
விஷ மருந்து சாப்பிட்டு பள்ளி மாணவா் தற்கொலை
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே விஷ மருந்தை சாப்பிட்டு பள்ளி மாணவா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், கீழிருப்பு கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் கலையரசன்(14). இவா், மேலிருப்பு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அண்மையில் பள்ளி வகுப்பறையில் கலையரசனுக்கும், சக மாணவா்களுக்கும் சண்டை ஏற்பட்டதாம். இதை வகுப்பாசிரியா் சமாதானம் செய்து அனுப்பி வைத்தாராம்.
இந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி இரண்டு பெண் ஆசிரியைகள் கலையரசனை தனியாக அழைத்து திட்டினராம். மறுநாள் காலையில் வீட்டிலிருந்த கலையரசன் விஷ மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாராம். இதையறிந்த உறவினா்கள் அவரை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலையரசன், அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.