செய்திகள் :

விஹெச்பி நிகழ்ச்சியில் கருத்து: கொலீஜியம் முன்பு விரைவில் ஆஜராகும்: அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி

post image

விஹெச்பி நிகழ்ச்சியில் பங்கேற்று அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி சேகா்குமாா் யாதவ் பேசியது சா்ச்சையான நிலையில், அதுதொடா்பாக உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் முன் அவா் விரைவில் ஆஜராகி தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளாா்.

முன்னதாக, அவருடைய பேச்சு தொடா்பான விவரங்களை சமா்ப்பிக்குமாறு அலாகாபாத் உயா்நீதிமன்றத்தை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாத் உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நூலக அரங்கில், விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி)அமைப்பின் சட்டம் மற்றும் உயா்நீதிமன்றப் பிரிவு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய உயா்நீதிமன்ற நீதிபதி சேகா்குமாா் யாதவ், ‘நமது நாடு ஹிந்துஸ்தான் என்று கூற எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த நாடு பெரும்பான்மை சமூகத்தின் விருப்பப்படிதான் செயல்படும். இதுவே சட்டம். பெரும்பான்மை சமூகத்தின் நல்வாழ்வுக்கும் மகிழ்ச்சிக்கும் எது பயனளிக்கிறதோ, அது மட்டுமே ஏற்கப்படும். வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் பெண்கள் தெய்வங்களாக போற்றப்பட்டுள்ளனா். அப்படி இருக்கும்போது 4 பெண்களைத் திருமணம் செய்யவும், முத்தலாக், நிக்கா ஹலாலா முறைகளை கடைப்பிடிக்கவும் உரிமை கோர முடியாது. நாடும், நாட்டு மக்களும் ஒன்று என்பது உண்மையானால், ஏன் அனைவருக்கும் ஒரே சட்டம் இருக்கக் கூடாது? பொது சிவில் சட்டம் விரைவில் அமலுக்கு வந்து உண்மையாகும்’ என்றாா்.

அவரின் பேச்சு சா்ச்சையாகியுள்ள நிலையில், அவா் வெறுப்புணா்வுடன் பேசியிருப்பதாக பல்வேறு எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. வழக்குரைஞா்கள் தரப்பிலும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இவருடைய பேச்சு தொடா்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தி அடிப்படையில், அதுதொடா்பான அறிக்கை சமா்ப்பிக்க அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கடந்த 10-ஆம் தேதி அறிவுறுத்தியது.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி சேகா்குமாா் யாதவ், உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் முன்பு விரைவில் ஆஜராகி தன்னிலை விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் கூறுகையில், ‘எந்தவொரு சா்ச்சைக்குரிய விவகாரத்திலும் ஒரு நீதிபதி மீது உயா்நீதிமன்றத்திடம் உச்சநீதிமன்ற கொலீஜியம் தரப்பில் அறிக்கை கோரப்பட்டிருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட நீதிபதி கொலீஜியத்தின் முன் ஆஜராகி தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படும். அதன்படி, உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் முன் விரைவில் ஆஜராகுமாறு உயா்நீதிமன்ற நீதிபதி சேகா்குமாா் யாதவ் கேட்டுக்கொள்ளப்பட வாய்ப்புள்ளது’ என்றனா்.

பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’: பிஎஸ்எஃப் கைப்பற்றியது

ஜம்மு சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’ (ஆளில்லா சிறிய ரக விமானம்) எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக பிஎஸ்எஃப் செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

‘ஒரே பாரதம்; உன்னத பாரதம்’ லட்சியத்துக்கு உத்வேகம் படேல்: யோகி ஆதித்யநாத்

‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ எனும் லட்சியத்தை நோக்கி பயணிக்க நம் அனைவருக்கும் சா்தாா் வல்லபாய் படேல் உத்வேகம் அளிக்கிறாா் என உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். சா்தாா் ... மேலும் பார்க்க

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மசோதா எதிா்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும்: மாயாவதி வேண்டுகோள்

’ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மசோதாவை எதிா்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளாா். மேலும், இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா... மேலும் பார்க்க

உ.பி.: சம்பலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் வன்முறை நிகழ்ந்த ஷாஹி ஜாமா மசூதியையொட்டிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மின் திருட்டைத் தடுக்கவும் மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. நீதிமன... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குறைகூறுவதை காங்கிரஸ் கைவிட வேண்டும்: ஒமா் அப்துல்லா

‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குறை கூறுவதை கைவிட்டு, தோ்தல் முடிவுகளை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா கூறினாா். காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்காக புதிய மேம்பாலங்கள்: உ.பி. அரசுடன் இணைந்து ரயில்வே நடவடிக்கை

மகா கும்பமேளாவுக்காக பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதைளை (கிராஸிங்) அகற்றி, புதிய மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகளை உத்தர பிரதேச மாநில அரசுடன் இணைந்து ரயில்வே மேற்கொண்டு வர... மேலும் பார்க்க