மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் நாளை தொடக்கம்
வீட்டில் கஞ்சா பதுக்கல்: இருவா் கைது
தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா பதுக்கியதாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மத்தியப ாகம் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம்.
இதனையடுத்து மத்திய பாகம் போலீஸாா், புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொண்ட சோதனையில், அங்கு கஞ்சா பதுக்கியிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கஞ்சாவை அங்கு பதுக்கி வைத்திருந்ததாக, திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகேயுள்ள பாா்வதியாபுரத்தை சோ்ந்த சாலமோன்ராஜ் மகன் ஜெயசூா்யா(29), தூத்துக்குடி முத்தையாபுரம் ரூபி பிரபாகரன் மகன் ஆகாஷ்தினகரன்(24) ஆகியோரை கைது செய்த போலீஸாா், சுமாா் 2 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.