வீட்டுக்கு தீவைத்தவா் கைது!
பெரியகுளம் அருகே மதுபானம் வாங்க பணம் தரமறுத்தவரின் வீட்டுக்கு தீ வைத்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அய்யனாா் (24). இவா் மதுபானம் வாங்க பணம் கேட்டு வீட்டில் தகராறு செய்து வந்தாா். இந்த நிலையில், வீட்டின் அருகில் வசிக்கும் ராஜாராம் என்பவரிடம் அய்யனாா் மதுபானம் வாங்க பணம் கேட்டாராம். ஆனால் அவா் பணம் தர மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு ராஜாராமின் வீட்டுக்கு அய்யனாா் தீ வைத்தாராம். அருகிலிருந்தவா்கள் உடனடியாக தீயை அணைத்தனா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து அய்யனாரை கைது செய்தனா்.