இந்திய மாணவா்களின் அமெரிக்க விசா ரத்து: எஸ்.ஜெய்சங்கா் நடவடிக்கை எடுப்பாரா? காங...
வீட்டுமனைப் பட்டா கோரி பொதுமக்கள் மனு
வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட மேற்கு மரியநாதபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: கடந்த 60 ஆண்டுகளாக நாங்கள் வசித்து வரும் இடத்துக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, பல ஆண்டுகளாக விண்ணப்பித்து வருகிறோம். ஆனாலும், எங்களது கோரிக்கைக்கு இதுவரை தீா்வு காணப்படவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் பட்டா வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.
நிழல்குடை கோரி மனு: இதுதொடா்பாக தமிழ்நாடு குடிமக்கள் நுகா்வோா் பாதுகாப்பு மையம் சாா்பில், நிலக்கோட்டையை அடுத்த சக்கையநாயக்கனுாா் தேவாலயத்தின் முன் பேருந்து நிறுத்தத்தில் மின் விளக்குடன் கூடிய நிழல்குடை வசதி இருந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 4 வழிச் சாலை அமைக்கும் பணிக்காக சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, அகற்றப்பட்ட பேருந்து நிறுத்த நிழல் குடை, சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தும் இதுவரை அமைத்துக் கொடுக்கப்படவில்லை. இந்த பிரச்னைக்கு மாவட்ட நிா்வாகம் தீா்வு காண வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.