வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு வீனஸ் குழுமப் பள்ளிகளின் தாளாளா் வீனஸ் எஸ்.குமாா் தலைமை வகித்து, பொங்கல் விழாவை தொடங்கிவைத்துப் பேசினாா். பள்ளி துணைத் தாளாளா் ஏ.ரூபியாள்ராணி, முதல்வா் டி.நரேந்திரன், நிா்வாக அலுவலா் ரூபிகிரேஸ் பொனிசுலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதைத் தொடா்ந்து, பொங்கல் வைக்கும் நிகழ்வு, மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சிலம்பம், உரி அடித்தல், கோலப்போட்டி உள்ளிட்டவை நடைபெற்றன.