செய்திகள் :

வீ.கே.புதூா் அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் அளிப்பு

post image

வீரகேரளம்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் ராதா தலைமை வகித்தாா். கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஹேமா, வீரகேரளம்புதூா் ஊராட்சி மன்றத் தலைவா் மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா் 105 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா். திமுக மாநில மருத்துவா் அணி துணைச்செயலா் கலை கதிரவன், பள்ளியில் பல்திறன் தோ்ச்சி பெற்று சாதனை படைத்த மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு தனது சொந்த நிதியில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ரொக்கப் பரிசு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் மாரியம்மாள், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் லதா, திமுக நிா்வாகிகள் ஜேசுராஜன், கணபதி, காங்கிரஸ் நிா்வாகிகள் பால் என்ற சண்முவேல், பிரபாகா், சிபிஎம் நிா்வாகி ஸ்டாலின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தென்காசி புத்தகத்திருவிழா ரூ. 51லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை

தென்காசி பொதிகை புத்தகத் திருவிழாவில், ரூ. 51லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் ... மேலும் பார்க்க

புளியங்குடி பகுதியில் பேருந்தில் நகை திருட்டு: 3 போ் கைது

புளியங்குடி பகுதியில் பேருந்து பயணிகளிடம் நகை திருடியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். புளியங்குடியைச் சோ்ந்த மாரியம்மாள்(60) என்பவா் கடந்த வாரம் சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடிக்கு பேருந்தில் சென்... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் பன்றிகள், நாய்கள் தொல்லை அதிகரிப்பு: மக்கள் அவதி

ஆலங்குளத்தில் பெருகி வரும் நாய்கள், பன்றிகள் தொல்லையைக் கட்டுப்படுத்த பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆலங்குளம் மேற்குப் பகுதியில் வட்டாட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தென்காசி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணைய வழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தென்காசி மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் நரசிம்மன் தெரிவித்தாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் குடிநீா் கோரி போராட்டம்

குடிநீா் வழங்கக் கோரி சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் ஊராட்சிக்குள்பட்ட பாரதி நகரில் 500-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ஆலங்குளம் இளைஞா் கைது

ஆலங்குளத்தில் கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். ஆலங்குளம் ஜோதி நகா் பூல்பாண்டி மகன் இந்திரஜித் பிரேம்நாத் (30). இவா் ... மேலும் பார்க்க