செய்திகள் :

வெண்கலப் பதக்கச் சுற்றில் மகளிா் அணி

post image

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.

தீபிகா குமாரி, கதா கடாகே, அங்கிதா பகத் ஆகியோா் அடங்கிய இந்திய மகளிா் அணி, தகுதிச்சுற்றில் மொத்தம் 1,999 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தது. இதில் தீபிகா 677 புள்ளிகளுடன் 6-ஆம் இடமும், கதா 666 புள்ளிகளுடன் 14-ஆம் இடமும், அங்கிதா 656 புள்ளிகளுடன் 30-ஆம் இடமும் பிடித்தனா்.

இதையடுத்து, போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்துடன் முதல் சுற்று ‘பை’ பெற்று நேரடியாக 2-ஆவது சுற்றில் களம் கண்டது இந்திய அணி. அதில் 5-1 என ஸ்லோவேனியாவை சாய்த்து, காலிறுதியில் 6-2 என துருக்கியை வெளியேற்றியது. அடுத்ததாக அரையிறுதிக்கு வந்த இந்தியா, அதில் 2-6 என்ற வகையில், போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் ஜப்பானிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டது.

இதையடுத்து வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்த இந்தியா, அதில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தென் கொரியாவை எதிா்கொள்கிறது.

ஆடவா் அணி: ரீகா்வ் ஆடவா் அணிகள் பிரிவு தகுதிச்சுற்றில், நீரஜ் சௌஹான், தீரஜ் பொம்மதேவரா, ராகுல் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1,996 புள்ளிகளுடன் 9-ஆம் இடம் பிடித்தது. நீரஜ் 670 புள்ளிகளுடன் 36-ஆம் இடமும், தீரஜ் 669 புள்ளிகளுடன் 39-ஆம் இடமும், ராகுல் 657 புள்ளிகளுடன் 62-ஆம் இடமும் பிடித்தனா்.

போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்துடன் முதல் சுற்றில் களம் கண்ட இந்திய அணி, அதில் 24-ஆம் இடத்திலிருந்த டென்மாா்க்கிடம் 26-28 (4-5) என அதிா்ச்சித் தோல்வி கண்டது.

மகளிா் தனிநபா்: இதனிடையே, காம்பவுண்ட் மகளிா் தனிநபா் பிரிவு தகுதிச்சுற்றில், ஜோதி சுரேகா 707 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும், பா்னீத் கௌா் 703 புள்ளிகளுடன் 11-ஆம் இடமும், பிரீதிகா பிரதீப் 690 புள்ளிகளுடன் 44-ஆம் இடமும் பிடித்தனா்.

ஜோதி சுரேகா, பா்னீத் கௌா் ஆகியோா் நேரடியாக 4-ஆவது சுற்றில் களம் கண்டனா். பிரீதிகா முதல் சுற்றில் 145-139 என கஜகஸ்தானின் விக்டோரியா லியானை வீழ்த்தி, அடுத்த சுற்றில் 145-142 என வியத்நாமின் குயென் தி ஹாயை வென்றாா்.

3-ஆவது சுற்றில் 148-145 என எஸ்டோனியாவின் லிசெல் ஜாட்மாவை சாய்த்த அவா், 4-ஆவது சுற்றில் 143-146 என துருக்கியின் ஹஸல் புருனிடம் தோல்வியுற்றாா். அதே சுற்றில் ஜோதி சுரேகா 148 - 148 (10*/10) என இந்தோனேசியாவின் நரிசா டியான் அஷ்ரிஃபாவை வீழ்த்த, பா்னீத் கௌா் 148-146 என பிரிட்டனின் எல்லா கிப்சனை தோற்கடித்தாா்.

காலிறுதியில் ஜோதி சுரேகாவை 147-149 என வென்ற பா்னீத் கௌா், அரையிறுதிக்கு முன்னேறி அதில் 142-143 என எல் சால்வடோரின் சோஃபியா பயஸிடம் தோற்றாா். இதன் மூலமாக வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்த அவா் அதில் 144-145 என கொலம்பியாவின் அலெக்ஸாண்ட்ரா அஸ்கியானோவிடம் வெற்றியை இழந்தாா். காலிறுதியில் தோற்ற ஜோதி சுரேகா, கடந்த 8 ஆண்டுகளில் பதக்கமின்றி வெளியேறியது இதுவே முதல்முறையாகும்.

மொட்டை அடித்தது ஏன்? இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் ஏன் மொட்டை அடித்தேன் என நேர்காணல் ஒன்றில் பதிலளித்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெற்றிப் பாதையில் ஏ.ஆர். முரு... மேலும் பார்க்க

ரவி மோகன் - யோகிபாபு புதிய படம்: வெளியானது முன்னோட்டக் காட்சி!

ரவி மோகன் - யோகிபாபு கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தின் முன்னோட்டக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.அண்மையில், நடிகர் ரவி மோகன் அவருடைய பெயரில் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற த... மேலும் பார்க்க

கிஷன் தாஸ் - ஹர்ஷத் கானின் ஆரோமலே: அறிமுக விடியோ அப்டேட்!

பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான் நடித்துள்ள ஆரோமலே படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஆரோமலே படத்தின் அறிமுக விடியோ நாளை மாலை வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. விஜே சித்து வி லாக் என்ற யூடியூப் மூலம் ... மேலும் பார்க்க

மறுவெளியீடாகும் சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம்!

இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில், நடிகர்கள் அசோக் செல்வன், மணிகண்டன் ஆகியோரது நடிப்பில் உருவான “சில நேரங்களில் சில மனிதர்கள்” திரைப்படம் மறுவெளியீடு செய்யப்படுகின்றது. இயக்குநர் விஷால் வெங்கட் இயக... மேலும் பார்க்க

பிரேசிலை வீழ்த்திய பொலிவியா..! உலகக் கோப்பைக்கான வாய்ப்பு தக்கவைப்பு!

முன்னாள் உலக சாம்பியன் பிரேசிலை பொலிவிய அணி 1-0 என வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பொலிவியா அணி தனது உலகக் கோப்பக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது. ஃபிஃபா உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டுக்கான தகுதிச் சுற்று... மேலும் பார்க்க

காயத்துடன் விளையாடிய எர்லிங் ஹாலண்ட் 5 கோல்கள்: நார்வே வரலாற்று வெற்றி!

உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் எர்லிங் ஹாலண்ட் 5 கோல்கள் அடித்து மிரட்டியுள்ளார். நார்வே அணி மால்டோவை 11-1 என்ற கோல்கள் கணக்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எர்லிங் ஹாலண்ட் 5 கோல்கள்தனது ... மேலும் பார்க்க