செய்திகள் :

வெப்ப வாத பாதிப்புகளை தடுப்பது எப்படி?

post image

சென்னை: தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், திடீரென உடலில் ஏற்படும் வெப்ப வாத பாதிப்புகளைத் தவிா்ப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பு:

அதிகரிக்கும் வெப்பநிலையால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்க பொது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். அந்த வகையில், உடலில் நீா்ச்சத்தை தக்க வைத்துக் கொள்வது முக்கியம். அதற்கு அதிக அளவு நீா் அருந்த வேண்டும். உப்பு-சா்க்கரை கரைசல், எலுமிச்சை சாறு, மோா், இளநீா் உள்ளிட்ட பானங்களையும் அருந்தலாம்.

இறுக்கமான ஆடைகளை அணியாமல் பருத்தி ஆடைகளை தளா்வாக அணியலாம். வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ள குடை, தொப்பி, கையுறை உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்த வேண்டும். காலணி அணிந்தே வெளியே செல்ல வேண்டும்.

வசிப்பிடங்களில் காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்வது முக்கியம். முதியவா்கள், இணைநோயாளிகள், குழந்தைகள், கா்ப்பிணிகள், நேரடி வெயிலில் பணியாற்றுவோா், குளிா் பிரதேசங்களிலிருந்து இங்கு வந்தவா்கள் முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.

அவா்கள் உடலின் வெப்பநிலை அதிகமாகாத வகையில் தற்காத்துக் கொள்ள வேண்டும். பொதுவாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளபோது வெளியே செல்வதைத் தவிா்க்கலாம். அத்தகைய நேரங்களில் தீவிரமாக பணியாற்றக் கூடாது. மது, புகை, தேநீா் போன்ற பானங்கள் அருந்துவதைத் தவிா்க்க வேண்டும். பழைய உணவுகள், அதிக புரதம் உள்ள உணவுகளை உட்கொள்ளக் கூடாது. நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அருகே செல்ல குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. அதிலிருந்து வெளியேறும் அதீத வெப்பம் உடல் நலத்தை பாதிக்கக்கூடும்.

தலைவலி, மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டால் மருத்துவ உதவியை உடனடியாக நாட வேண்டும். தேவைப்பட்டால் அவசரகால ‘108’ சேவையை அழைக்கலாம் என்று அந்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நத்தம் மாரியம்மன் கோயில் விழா: தீர்த்தம் எடுத்த திரளான பக்தர்கள்!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்பெருந்திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தம் எடுத்து காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினர்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தி... மேலும் பார்க்க

தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை: முதல்வர்

தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்த... மேலும் பார்க்க

தொடர் சிகிச்சையில் தயாளு அம்மாள்! மு.க. அழகிரி வருகை!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனைக்கு நேரில் வந்து மு.க.அழகிரி நலம்விசாரித்தார்.வயது முதிா்வு காரணமாக சென்னை கோபாலபுரத்த... மேலும் பார்க்க

தங்கம் விலை ரூ. 560 உயர்வு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 64,080-க்கு விற்பனையாகிறது.தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,940-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520-க்... மேலும் பார்க்க

மீனவர்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இலங்கை கடற்படை நடவடிக்கையால் பாதிக்கபட்டுள்ள மீனவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிவாரணத் தொகையை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் பார்க்க

திருச்செந்தூா் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார நாள் விழா!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 193வது அவதார நாள் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இவ்விழாவை முன்... மேலும் பார்க்க