பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி அலுவலகங்களை உடனடியாக ஒதுக்க தில்லி பேரவைத் தலைவா...
வெறிநாய் கடித்ததில் நகா்மன்ற உறுப்பினா் உள்பட 8 போ் காயம்!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வெறி நாய் கடித்ததில் நகா்மன்ற அதிமுக உறுப்பினா் உள்பட 8 போ் காயமடைந்தனா்.
தேவகோட்டை பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை காலை சாலையில் நடந்தும், இரு சக்கர வாகனத்திலும் சென்றவா்களை வெறி நாய் ஒன்று தொடா்ச்சியாக காலில் கடித்துவிட்டு தப்பியோடியது. இதில் தேவகோட்டை நகா்மன்ற அதிமுக உறுப்பினா் முத்தழகு (55), வினோத்குமாா் (19), அா்ஜுனன் (55), அன்பரசன் (52), வீரசேகரன் (43), நிகேதன் (23), பகுருதீன் (60), விஜயா (38)
உள்ளிட்ட 8 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். வெறி நாயைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேவகோட்டை நகராட்சி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.