செய்திகள் :

வெறிநாய் கடித்து 9 ஆடுகள் இறப்பு; இறந்த ஆடுகளுடன் போராட்டத்தில் குதித்த விவசாயி- புதுக்கோட்டை சோகம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகாவில் அமைந்துள்ளது அம்மாபட்டினம். இந்த ஊரைச் சேர்ந்த முகமது ரியாஸ் என்பவர் 50- க்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில், அப்பகுதியில் சுற்றி வந்த வெறிநாய் ஒன்று, அவர் ஆசையோடு வளர்த்து வந்த ஆடுகளை கடித்துவிட்டது. வெறி நாய் கடி விஷம் என்பதால் நாய் கடித்த ஒன்பது ஆடுகளும் சுருண்டு விழுந்து இறந்தன. இதனை பார்த்த ஆட்டின் உரிமையாளர் முகமது ரியாஸ் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது நின்றார். அதன்பிறகு, இறந்து போன ஆடுகளை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு கடற்கரை சாலையின் குறுக்கே இறந்து போன 9 ஆடுகளையும் சாலையின் குறுக்கே வைத்து, அவர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

goats with farmer

அப்போது அவர், 'இறந்து போன ஆடுகளுக்கு நிவாரணம் வேண்டும். இன்னைக்கு என்னோட ஆடுகளை நாய் கடித்துவிட்டது. நாளைக்கு உங்கள் ஆடுகளுக்கு இப்படி நாய்களால் ஆபத்து வரும். அதனால், வேடிக்கை பார்க்காமல் என்னோட வந்து போராடுங்க' என்று கூறி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், போக்குவரத்து நிறைந்த கிழக்குக் கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலையின் குறுக்கே போடப்பட்டிருந்த இறந்து போன ஆடுகளை அப்புறப்படுத்திய பின், போக்குவரத்து சீரான நிலைக்கு திரும்பியது. நாய் கடித்து இறந்து போன ஆடுகளுடன் விவசாயி ஒருவர் சாலை மறியல் போராட்டம் நடத்தியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்: திருமணம் தாண்டிய உறவு விவகாரத்தில் கொலை - 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி(60). கடந்த 2000-ம் ஆண்டு நல்லதம்பிக்கு 35 வயது இருந்தபோது, உம்பிளிக்கம்பட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: பட்டியல் சமூக மாணவரை தாக்கிய மாற்று சமூக மாணவர்கள் - அரசு விடுதியில் அரங்கேறிய அவலம்

ராமநாதபுரம் அம்மா பூங்கா பகுதியில் மாணவர்களுக்கான அரசு சமூக விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு சமுதாயத்தினை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகி... மேலும் பார்க்க

``டெல்லியில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல்'' - NIA விசாரணை என்ன சொல்கிறது?

டெல்லியில் கடந்த வாரம் செங்கோட்டை அருகில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பில், வெடிகுண்டு இருந்த காரை ஓட்டி வந்த டாக்டர் உமர் உல் நப... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ``திருமணம் நடைபெற 16 நாள் குழந்தையை பலியிட்ட 4 பெண்கள்'' - பெற்றோர்கள் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் பூனம்ராம். இவரது மனைவி சுமன். சுமனுக்கு அங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருந்தது.ஆனால், பூனத்தின் சகோதரிகள் ரமேஷ்வரி, மம்தா, கீதா, மஞ்சு... மேலும் பார்க்க

காங்கேயம்: சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை; போலி வார்டன் போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்குப் பின்புறம் தமிழக அரசின்... மேலும் பார்க்க

`10 நிமிடம் தாமதம்' - ஆசிரியர் கொடுத்த `100 முறை சிட்-அப்' தண்டனையால் உயிரிழந்த மாணவி

இப்போது பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் வேறு வழிகளில் தண்டனை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். மும்பை வசாயில் பகுதியில் அது போன்று தண்டனை பெற்ற ஒர... மேலும் பார்க்க