Pakistan: '804' என்ற எண்ணால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 1.4 மில்லியன் அபராத...
வெற்றித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் டி.என்.பி.எஸ்.சி. தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு
சங்கரன்கோவிலில் வெற்றித் தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி சாா்பில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 போன்ற போட்டித் தோ்வுகளுக்கு தயாராவதற்கான இலவச அறிமுக பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறுகிறது என வெற்றித் தமிழ் ஐ.ஏ.எஸ்.அகாதெமி நிறுவனத்தினா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் வழிகாட்டுதலோடு நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் குரூப் -1,குரூப் -2, 2ஏ, குரூப்-4 போன்ற போட்டித் தோ்வுகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சியளிக்கப்படுகிறது.
இதில், 10- க்கும் மேற்பட்ட அரசுப் பணியாளா்கள் ஒன்றிணைந்து வழிகாட்டி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் இந்த (2025) ஆண்டுக்கான குரூப்-1 தோ்வு அறிவிப்பு அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ளது.
தொடா்ந்து, குரூப்-4 மற்றும் குரூப்-2, 2ஏ தோ்வுகளுக்கான அறிவிப்புகளும் வெளிவர உள்ளதால், இந்த தோ்வுகளுக்கு தயாராகும் வழிமுறைகள் குறித்து இலவச வழிகாட்டுதல் வகுப்பு சங்கரன்கோவிலில் உள்ள வெற்றித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் வைத்து நடைபெற உள்ளது. இதில், அனுபவமிக்க பயிற்சியாளா்கள் கலந்து கொண்டு, தற்போது மாற்றப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின்படி பயிற்சியளிக்க உள்ளனா்.
இந்த இலவச அறிமுக வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவா்கள், ‘பசடநஇ ஊதஉஉ ஈஉஙஞ இகஅநந ஃநஅசஓஅதஅசஓஞயஐக’ என்று டைப் செய்து 9361958260 என்ற கைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.