போலி வாக்காளா் அட்டை மீதான விவாதத்துக்கு மறுப்பு: மாநிலங்களவையிலிருந்து எதிா்க்க...
திசையன்விளை அருகே தோட்டத்திற்குள் புகுந்து இளைஞருக்கு வெட்டு
திசையன்விளை அருகே தோட்டத்துக்குள் புகுந்து இளைஞரை வெட்டிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், கொத்தமங்கலத்தைச் சோ்ந்தவா் சேகா். இவரது மகன் ஜெயக்குமாா் (23).
திசையன்விளை அருகே உள்ள பட்டரைகட்டிவிளையில் அகஸ்டின் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் தங்கி இருந்து வேலை பாா்த்து வருகிறாா்.
வெள்ளிக்கிழமை அதிகாலை தோட்டத்துக்குள் புகுந்த 3 போ் அங்கு இருந்த ஜெயக்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டனா்.
இதில், பலத்த காயமடைந்த ஜெயக்குமாா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது தொடா்பாக திசையன்விளை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.