தினமணி செய்தி எதிரொலி: அரக்கோணம் புறவழிச் சாலையில் வேகத்தடைகள் அமைப்பு
கடையநல்லூா் அருகே உரிமமற்ற பட்டாசு ஆலைக்கு சீல்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே உரிமம் இன்றி இயங்கிய பட்டாசு ஆலைக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
கடையநல்லூா் அருகேயுள்ள ஊா்மேனியழகியான் காட்டுப்பகுதிக்குள் பூபதிராஜன் என்பவரின் கோழிப்பண்ணையில் உரிமம் இன்றி பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. அதன்பேரில்,கடையநல்லூா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், தென்காசி டிஎஸ்பி தமிழ் இனியன், ஆய்வாளா் கவிதா, கடையநல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் ஷேக் அப்துல்லா உள்ளிட்டோா் கோழிப்பண்ணையில் ஆய்வு மேற்கொண்டனா். அதில், உரிமம் இன்றி பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் அங்குள்ள வெடிமருந்துகளையும் பட்டாசுகளையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புத் துறையினரும் வருவாய்த் துறையினரும் ஈடுபட்டு வருகின்றனா். இப்பணிகளை தென்காசி வருவாய் கோட்டாட்சியா் லாவண்யா ஆய்வு செய்தாா்.