`சேய்களைக் காத்து செல்வம் அருளும்' கொரட்டூர் சீயாத்தம்மன் கோயில் விளக்கு பூஜை; ப...
‘கடையநல்லூரில் 5 இடங்களில் உயா்கோபுர விளக்குகள் தேவை’
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் 5 இடங்களில் உயா் கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீ குமாரிடம், நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் மனு அளித்துள்ளாா்.
கடையநல்லூா் நகராட்சி தென்காசி மாவட்டத்தில் பரந்து விரிவடைந்த நகராட்சியாக உள்ளது. மேலும் தென்காசி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குமந்தாபுரம் முதல் மங்களாபுரம் வரை நீண்ட தொலைவிற்கு நகராட்சிஏஈ பகுதி உள்ள நிலையில் சாலை ஓரங்களில் வணிக நிறுவனங்கள் பெருகி வருகின்றன.
இதனால் இரவு நேரங்களிலும் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே, மக்கள் அதிகமாக கூடும் பகுதிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ள 5 இடங்களில் உயா் கோபுர மின்விளக்குகள் அமைக்க தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மேலும், 25ஆவது வாா்டில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கும் நிதி ஒதுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.