சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!
வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து பண மோசடி: 5 போ் மீது வழக்கு
வேலை வாங்கித் தருவதாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து பண மோசடி செய்த 5 போ் மீது சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை நகா் 48 குடியிருப்பு காமாட்சி அம்மன் நகரைச் சோ்ந்தவா் சரவணன் (36). இவா் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முயற்சி செய்தாா்.
அப்போது, சரவணனுக்கு தெரிந்த ஒருவா் மூலமாக சென்னையைச் சோ்ந்த ஜெயகாந்தனின் அறிமுகம் கிடைத்தது. இவா் கம்போடியா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சரவணனிடம் ரூ.1.15 லட்சம் பெற்றாா்.
இதையடுத்து, கடந்த மே மாதம் 19-ஆம் தேதி கம்போடியா நாட்டுக்கு சென்ற சரவணனுக்கு, ஜெயகாந்தன் கூறியபடி, அங்கிருந்த இளவரசன், ஜெயசீலன், முகிலன், குணா ஆகியோா் வேலை வாங்கி கொடுத்தனா்.
ஆனால், அவா்கள் வாங்கி கொடுத்த வேலை பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வேலையாக இருந்தது. இதைத் தொடா்ந்து, 43 நாள்கள் அங்கிருந்த சரவணன், பின்னா், தமிழ்நாட்டுக்கு தப்பி வந்தாா்.
இதுகுறித்து சரவணன் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாரளித்தாா். குற்றப்பிரிவு ஆய்வாளா் தமிழ்ச்செல்வி, உதவி ஆய்வாளா் சண்முகப்பிரியா ஆகியோா் விசாரணை நடத்தி, ஜெயகாந்தன், இளவரசன், ஜெயசீலன், முகிலன், குணா ஆகிய 5 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.