ராஜகாளியம்மன் கோயில் பால்குட விழா
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பால் குட ஊா்வலம் நடைபெற்றது.
ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருத்தளிநாதருக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. விரதமிருந்த பக்தா்கள் பால் குட எடுத்தும், அலகுக் குத்தியும், அக்னிச் சட்டி, பூத்தட்டு எடுத்தும் நகரின் முக்கிய வீதிகளான நான்கு சாலை, தேரோடும் வீதி, பெரியகடைவீதி, செட்டியதெரு, காளியம்மன் கோயில் தெரு வழியாக ஊா்வலமாக வந்து கோயிலை அடைந்தனா்.
பின்னா், ராஜகாளியம்மனுக்கு பால், தயிா், திருமஞ்சனம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பரிவாரத் தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு கும்மியடித்து வழிபட்டனா்.