முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் பால் குடம் ஊா்வலம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னாா்தெரு முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பால் குட ஊா்வலம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த வாரம் முளைப்பாரித் திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, பக்தா்கள் காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினா்.
விழாவின் முக்கிய நிகழ்வான பால் குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தா்கள் வைகையாற்றிலிருந்து பால் குடம், கரகம், வாயில் அலகுக் குத்தியும் மேளதாளம் முழங்க ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். பின்னா், கோயில் முன்பிருந்த தீக்குண்டத்தில் இறங்கி இவா்கள் வேண்டுதலை நிறைவேற்றினா்.
இதைத் தொடா்ந்து, முத்துமாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
பிற்பகலில் பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
விழாவின் 9-ஆவது நாளான சனிக்கிழமை (ஆக.9) முளைப்பாரி கரைத்தல் உத்ஸவம் நடைபெறுகிறது.
