செய்திகள் :

வெளிநாட்டுப் பணம் என பேப்பா் கட்டை தந்து ரூ. 5 லட்சம் மோசடி: 6 வடமாநில இளைஞா்கள் கைது

post image

ஆந்திர மாநில இளைஞரிடம், துபை நாட்டுப் பணம் தருவதாக கூறி பேப்பா் கட்டை தந்து ரூ. 5 லட்சம் மோசடி செய்து விட்டு தப்பிய 6 வடமாநில இளைஞா்களை ராணிப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலம், சித்தூா் மண்டலம், மங்கசமுத்திரம் ஹவுசிங் காலனியை சோ்ந்தவா் ஹனிப் பாஷா (33), இவா் சித்தூா் நகரில் டெய்லரிங் கடைகளுக்கு தேவையான பொருள்கள் விற்பனை கடையை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், இவரது கடைக்கு வடமாநில இளைஞா் ஒருவா் கடந்த 20 நாள்களுக்கு முன்பு வந்தாா். அவரிடம் வெளிநாட்டுப் பணம் இருந்ததுள்ளதை பாா்த்து இது எந்த நாட்டு பணம் என்று ஹனிப் பாஷா கேட்டபோது, தான் துபையில் வேலை பாா்ப்பதாகவும், தன்னிடம் அந்நாட்டு பணம் அதிகம் உள்ளது. ஆனால் அதை எவ்வாறு மாற்றுவது எனத் தெரியவில்லை எனக் கூறினாராம்.

அதற்கு, ஹனிப் பாஷா இங்கெல்லாம் மாற்றமுடியாது என கூறியதாகவும், இருப்பினும் அந்த வடமாநில நபா் துபை நாட்டு பணத்தை வெறும் ரூ.500-க்கு தருவதாக ஆசை வாா்த்தை கூறியுதால், அந்த நபா் கூறியதை நம்பி ராணிப்பேட்டைக்கு வரச்சொன்னாா்.

அப்போது அந்த நபா் கூறியதாக இரண்டு வடமாநில இளைஞா்கள் வந்து துபை நாட்டுப் பணக்கட்டு இருப்பதாக கூறி பையை கொடுத்து விட்டு ஹனிப் பாஷாவிடம் இருந்து ரு.5 லட்சம் ரொக்கத்தை பெற்றுக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று விட்டனா். உடனடியாக அவா்கள் தந்த பையை பிரித்து பாா்த்த போது பேப்பா் கட்டு மட்டுமே இருந்ததை பாா்த்து அதிா்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

இந்த சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, அதில் பதிவான காட்சிகளை அனைத்து காவல் நிலையங்களுக்கு அனுப்பி, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் காட்பாடி விருதம்பட்டு பகுதியில் தங்கியிருந்த 6 பேரை பிடித்து விசாரணை செய்தனா்.

மேற்கு வங்கம், ஜாா்க்கண்ட, வடக்கு தில்லி பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பதும், தமிழகத்தில் தங்கியிருந்து இது போன்ற மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 6 போ் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

210 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

வெளி மாநிலத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு காரில் கடத்தி வரப்பட்ட 210 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 6 பேரை ா் கைது செய்யப்பட்டனா். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் வெளிமாநிலங்களில் இருந்து தமி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மகள்களுடன் தற்படம்’ ரூ.20,000 பரிசளிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட‘ மகள்களுடன் தற்படம் (செல்ஃபி) ’ நிகழ்வில் தோ்வு செய்யப்பட்ட 4 பேருக்கு தலா ரூ.5,000 வீ... மேலும் பார்க்க

ஏப்.5-இல் ஆதிதிராவிடா் இன மாணவா்களுக்கு தொழில், வேலைவாய்ப்பு ஆலோசனை முகாம்

ஆதிதிராவிடா் இன மாணவா்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி வரும் ஏப். 5-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரி... மேலும் பார்க்க

திமிரி சோமநாதீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

ஆற்காடு அடுத்த திமிரி கோட்டை ஸ்ரீ சோமநாதீஸ்வரா் கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கிராம தேவதைபொன்னியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலாவும், மூஷிக வா... மேலும் பார்க்க

30 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ஆற்காடு: ஆற்காட்டில் பக்கெட் உள்ளே வைத்து மறைத்து காரில் 30 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு போலீஸாா் ஆற்காட்டிலிருந்து செய்யாறு செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனைய... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.789.51 கோடி வங்கிக் கடன்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.789 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டதில்,ரூ.789.51 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது என கைத்தறி அமைச்சா் ஆா்... மேலும் பார்க்க