செய்திகள் :

வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? - முதல்வரை விமர்சித்த விஜய்!

post image

முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டது குறித்து தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இன்று(சனிக்கிழமை) நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று மக்கள் சந்திப்பு நடத்துகிறார்.

இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் வந்த அவர் அங்கிருந்து கார் மூலம் நாகப்பட்டினம் சென்றார்.

விஜய்யின் வருகையை ஒட்டி, நாகப்பட்டினத்தில் காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.

நாகப்பட்டினம், புத்தூர் ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே இன்று பகல் 1 மணி அளவில் வந்த விஜய், தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:

"மக்களோடு மக்களாக நிற்பதுதான் என்னுடைய வேலை. இது புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டும்.

மீனவர்களுக்காக குரல் கொடுப்பது மட்டுமின்றி ஈழத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். உலகத்தில் அவர்கள் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பது முக்கியம். அவர்களின் கனவுகளும் வாழ்க்கையும் முக்கியம்.

மீனவர்களுக்காக வெறும் கடிதம் மட்டும் எழுதிவிட்டு அமைதியாக இருக்க நாம் ஒன்றும் கபட நாடக திமுக அரசு இல்லை. தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் என்று பிரித்துப் பார்க்கும் பாசிச பாஜக அரசும் இல்லை.

முதல்வர் வெளிநாடு சென்று வந்தார். அவர் செய்தது வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? வெளிநாட்டு முதலீடு இங்கு வருகிறதா? குடும்பத்தின் முதலீடு வெளிநாட்டுக்குச் செல்கிறதா?

நான் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டபோது ஏகப்பட்ட நிபந்தனைகள். மின் தடை, நெருக்கடியான இடம் தேர்வு என பல நிபந்தனைகள்..

திமுகவும் பாஜகவும்தான் மறைமுக உறவுக்காரர்களாக இருக்கிறார்களே..

மேலும் பேருந்துக்குள்ளே இருக்க வேண்டும் கையையே இவ்வளவுதான் தூக்க வேண்டும். மக்களை பார்த்து சிரிக்காதே கை அசைக்காதே.. என ஏகப்பட்ட நிபந்தனைகள்.. மிரட்டி பார்க்கிறீர்களா? அதுக்கு நான் ஆள் இல்லை" என்று பேசினார்.

TVK vijay speech in nagapattinam

கருவலூரில் கட்டுமானப் பணியில் கட்டடம் இடிந்து இருவர் உயிரிழப்பு

அவிநாசி அருகே கருவலூர் உப்பிலிபாளையத்தில் கட்டுமானப் பணியின் போது கட்டடம் இடிந்து விழுந்ததில், இரு கட்டட தொழிலாளர்கள் சனிக்கிழமை உயிரிழந்தனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், கருவலூர் அருகே உப்பில... மேலும் பார்க்க

சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று(சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை,... மேலும் பார்க்க

எழுதிக் கொடுத்ததைப் பேசுகிறார்: விஜய்க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

நாகூர் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரத்தில் நலம்காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்ற அமைச்சர் மா... மேலும் பார்க்க

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(செப். 20) தொடக்கி வைத்தார்.பயிற்சியைத் தொடங்கி வைத்த அவர் பயிற்சி நூலை வெளியிட்டதுடன் ... மேலும் பார்க்க

திருவாரூரில் தவெக தலைவர் விஜய்!

தவெக தலைவர் விஜய், நாகை மாவட்டத்தைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திற்குச் சென்றுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு பிரசாரத்தை மேற்கொண்டு... மேலும் பார்க்க

வெளிநாட்டு பயணம்: விடியோ வெளியிட்டு முதல்வர் விளக்கம்

மக்களுடன் ஸ்டாலின் செயலியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் விடியோ வெளியிட்டுள்ளார். விடியோவில் அவர் தெரிவித்ததாவது, கேள்வி: தொழில் முதலீட்டாளர்களிடம் தமிழ்நாடு குறித்த பார்வை ... மேலும் பார்க்க