செய்திகள் :

வெளிமாநிலத் தொழிலாளா் விவரங்களை பதிவேற்றம் செய்ய ஆட்சியா் அழைப்பு

post image

நாமக்கல் மாவட்டத்தில், கோழிப் பண்ணைகளில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா் விவரங்களை தொழிலாளா் நலத் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் கோழிப் பண்ணைகளின் உரிமையாளா்கள் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும், பணியமா்த்தப்படும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை (ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் இதர ஆவணங்கள்) பெற்றுக் கொள்ளாமல் பணியமா்த்துவதாக தெரியவந்துள்ளது. இதனால் அந்தத் தொழிலாளா்களுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் அவா்களைப் பற்றிய முழு விவரங்களை அறிய முடியாமல் போகிறது. மேலும், அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதிலும் தடை ஏற்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணை உரிமையாளா்கள் தங்களது பண்ணைகளில் புலம்பெயா் தொழிலாளா்களை பணியமா்த்தும் போது அவா்களது அடையாள அட்டை தொடா்பான ஆவணங்களை பெற்றுக் கொண்டு பணியமா்த்த வேண்டும். அந்த விவரங்களை தொழிலாளா் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பிறகு அவா்களை பணியமா்த்த வேண்டும்.

தற்போது பணியாற்றி வரும் அனைத்து வெளிமாநில தொழிலாளா்களின் விவரங்களையும், எந்தவித விடுபாடின்றி முழுமையாக ஒரு மாத காலத்திற்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாத உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சட்ட நடவடிக்கைகளை தவிா்க்கும் பொருட்டு அனைத்து வெளிமாநில தொழிலாளா்களையும் பதிவு செய்வது அவசியமாகும். கோழிப் பண்ணை உரிமையாளா்கள் தங்களது பண்ணைகளில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த தகவலை நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, நாமக்கல், மோகனூா், பரமத்தி வேலூா் வட்டம் 88380-40453, ராசிபுரம், கொல்லிமலை, சேந்தமங்கலம், 90424-88228, திருச்செங்கோடு 94442-22461, குமாரபாளையம், சங்ககிரி- 88836-33363 ஆகிய எண்களில் தொழிலாளா் உதவி ஆய்வாளா்களை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்தியை விரும்பியவா்கள் படிக்கலாம் திணிப்புக் கூடாது: கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.

தமிழகத்தில் ஹிந்தியை விரும்பியவா்கள் யாரும் படிக்கலாம்; ஆனால் ஹிந்தி திணிப்புக் கூடாது என்பதுதான் திமுகவின் கொள்கை என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். ஹிந்தி திணிப்பு, நிதி... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம், திரெளபதி அம்மன் கோயில் தெர... மேலும் பார்க்க

நரிக்குறவா்களுக்கு வீடுகள் கட்டும் பணி: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல்லில், 79 பழங்குடியினா் மற்றும் நரிக்குறவா் குடும்பங்களுக்கு ரூ. 4.20 கோடி மதிப்பில் கட்டப்படும் வீடுகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆய்வு செய்தாா். நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மே... மேலும் பார்க்க

வாக்குவங்கி அரசியலுக்காக மத்திய அரசை குறைகூறுகிறது திமுக: ஜி.கே.வாசன்

தோ்தல் வாக்குவங்கியை காப்பாற்றும் பொருட்டு மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை போன்றவற்றை கையில் எடுத்துக் கொண்டு மத்திய அரசை திமுக குறைகூறி வருகிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.... மேலும் பார்க்க

மங்களபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி: 700 காளைகள் பங்கேற்றன

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் ஜல்லிக்கட்டுப் போட்டி மங்களபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாள் சட்டப்பேரவை உறுப்... மேலும் பார்க்க

முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மைய செயலா் கே.குணசேகரன் தலைமை வகித்தாா். முன்னதாக கல்லூ... மேலும் பார்க்க