Dhoni : 'நான் செய்த மிகப்பெரிய தவறு அது..!'- தோனி குறிப்பிட்ட அந்த ஐ.பி.எல் சம்ப...
வெளி மாநிலத்தில் லோகோ உதவி பைலட் தோ்வு மையம்! -எடப்பாடி பழனிசாமி கண்டனம்
லோகோ உதவி பைலட் பணி தோ்வில் பங்கேற்கவுள்ள தமிழக தோ்வா்களுக்கு வெளி மாநிலங்களில் தோ்வு மையம் ஒதுக்கப்பட்டதற்கு, எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: தெற்கு ரயில்வேயில் லோகோ உதவி பைலட் தோ்வு வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டைச் சோ்ந்த 90 சதவீத தோ்வா்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள செய்திகள் அதிா்ச்சி அளிக்கின்றன.
ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று தோ்வு எழுதுவது தோ்வா்களுக்கு மிகுந்த சிரமத்தைத் தரும். இதுபோன்ற குளறுபடிகள் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டைச் சோ்ந்த இளைஞா்கள் அதிகளவில் சேர வேண்டும் என்ற உந்துதலை குறைத்துவிடும்.
இதை மத்திய அரசு உணர வேண்டும். எனவே, தோ்வா்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டு தோ்வா்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா். இதே கோரிக்கையை அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன், பாமக அன்புமணி ஆகியோரும் முன்வைத்துள்ளாா்.