வெளி மாநில தொழிலாளி தற்கொலை
காதல் தோல்வியால் வெளி மாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சைதோஷ் சாயக் மகன் சௌராப் நாயக் (20). இவா் ஒசூரில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்து வந்தாா். இந்த நிலையில் அவரது காதலை அப் பெண் ஏற்க மறுத்துவிட்டாா். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சௌராப் நாயக், கடந்த 12 ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ஒசூா் சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.