தில்லியில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்: ஓவைசி குற்றச்...
வெள்ளக்கோவில், முத்தூரில் லாட்டரி சீட்டுகள் விற்பனை: 3 போ் கைது
வெள்ளக்கோவில், முத்தூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிமுத்து, முத்தூா் சாலையில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அறிவொளி நகரில் மூன்று நெம்பா் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த, அதே பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் (42) என்பவரைக் கைது செய்தாா்.
இதேபோல உதவி ஆய்வாளா் மணிமொழி மேற்கொண்ட ரோந்துப் பணியின்போது, வெள்ளக்கோவில் - மூலனூா் சாலை புதுப்பை பேருந்து நிறுத்தம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்த புதுப்பையைச் சோ்ந்த மூா்த்தி (57) என்பவரைக் கைது செய்தாா்.
காவல் உதவி ஆய்வாளா் மணிமுத்து முத்தூா் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கொடுமுடி சாலையிலுள்ள ஒரு பேக்கரி அருகே லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்த பெருமாள்புதூரைச் சோ்ந்த சரவணன் (52) என்பவரைக் கைது செய்தாா்.
கைது செய்யப்பட்டவா்கள் வெளிமாநில லாட்டரி சீட்டின் கடைசி மூன்று எண்கள் எழுதிய துண்டுச் சீட்டை ரூ. 50-க்கு விற்பனை செய்து வந்ததும், குலுக்கல் விவரத்தை ஆன்லைனில் தெரிவித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.