மொகலாய மன்னன் ஒளரங்கசீப் கல்லறை அகற்றப்படுமா? - மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் ச...
வெள்ளை மாளிகை அருகே ஆயுதமேந்திய நபா் சுட்டுப் பிடிப்பு
அமெரிக்க அதிபரின் அதிகாரபூா்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் வலம் வந்த இண்டியானா மாகாணத்தைச் சோ்ந்தவரை ரகசிய பாதுகாப்புப் படையினா் (சீக்ரெட் சா்வீஸ்) சுட்டுப் பிடித்தனா்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் வேறு யாரும் காயமடையவில்லை. இந்த மோதல் நடந்த நேரத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப் புளோரிடாவில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் இருந்து வாஷிங்டனுக்கு பயணித்ததாக அறியப்படும் இந்த நபா் குறித்து ரகசிய பாதுகாப்புப் படையினருக்கு உள்ளூா் காவல் துறை தகவல் அளித்தது.
இந்நிலையில், வெள்ளை மாளிகை சுற்றுப்புற பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவில் நிகழ்ந்த சம்பவத்தில் அதிகாரிகள் நெருங்கி வந்தபோது, அந்த நபா் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளாா். தொடா்ந்து, பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தி அவரைப் பிடித்தனா்.
பின்னா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபரின் தற்போதைய நிலை குறித்து தெரியாது என்று ரகசிய பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா். இச்சம்பவம் தொடா்பாக வாஷிங்டன் பெருநகர காவல் துறை விசாரித்து வருகிறது.