செய்திகள் :

வேங்கைவயல்: "குற்றவாளியை முடிவு செய்துவிட்டுதான்..." - மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் பேட்டி

post image

வேங்கைவயல் மேல் நிலைக் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் எனப் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்தை 3 பேரைக் குற்றம்சாட்டுகிறது காவல்துறை. ஆனால், சி.பி.சி.ஐ.டி-யின் விசாரணை கறை படிந்தது எனவும் இந்த ஆதாரங்களை ஏற்க முடியாது எனவும் தெரிவிக்கிறார் மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன். அவரைச் சந்தித்து நமது கேள்விகளை முன் வைத்தோம்.

வேங்கைவயல் விஷயத்தில் ஒரு நிலை அறிக்கை காவல் துறை தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. விசாரணையில் சாட்சிகள் அடிப்படையில் வேங்கைவயல் பட்டியலினச் சமூக மக்களான 3 பேர் மீது குற்றச்சாட்டு முன் வைக்கிறார்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து?

ஏற்கெனவே இது போன்று நிலை இருக்கிறது என்று தெரிந்து கொண்டு 15/06/2024 ஆம் தேதி அன்று சென்னை பிரஸ் கிளப்பில் பேசியிருந்தேன். தலித் மக்கள் வாழுகின்ற பகுதியில் அவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த விஷயம் என்பது தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய ஒரு விஷயம். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட பிறகு 397 பேரை விசாரித்து உள்ளனர். 196 செல்போன்களின் டவர் லைன்களை பார்த்துள்ளனர். வாய்ஸ் டெஸ்ட் மற்றும் டிஎன்ஏ போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று சொன்னார்கள்.

இந்த வழக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்கு. கனகராஜ் என்பவர் அவரின் மகள் கோபிகாஸ்ரீ என்பவருக்குக் குடித்திருக்கும் தண்ணீராலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணத்தினாலோ உடல் பாதிப்பு ஏற்பட்டு முதலில் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் செல்கின்றனர். அங்கிருந்து அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில்தான் கண்டாமினேட்டட் வாட்டர் இருந்ததாகச் சொல்கின்றனர்.

இதற்கிடையில் குடிநீரில் ஏதோ கலந்திருப்பது என்பதனை அறிந்து மக்கள் சொன்னதுடனேயே முத்துராஜ் என்ற ஆயுதப்படைக் காவலர் தண்ணீர் தொட்டிக்கு மேலே சென்று குடிநீரில் மலம் கலந்திருப்பதைப் பார்க்கிறார். அவருடன் சுதர்சன் என்பவர்தான் அதனைப் படம்பிடித்து ஊடகத்திற்குக் காட்டுகிறார். அதன் பிறகுதான் ஊடகத்திற்குத் தெரிய வந்து இந்தப் பிரச்னை பெரிய விஷயமாக மாறுகிறது.

தன் மகள் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்பதனை அறிந்து கனகராஜ் என்பவர் அருகிலுள்ள வள்ளனூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில் தான் இது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, அதில் 31BX, 279, 328 ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து லோக்கல் போலீஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மக்கள் அங்குக் கூடுவதினாலும் பிரச்னை செய்வதினாலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. அப்படி மாற்றப்பட்ட பிறகு நாங்கள் அந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தோம். அவர்கள் அனைவரையும் நாங்கள் வரவழைத்துப் பேசினோம். இதுபோன்று கலந்து உள்ளது என்று தெரிந்த உடனே அதனைப் பாதுகாத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்க வேண்டும். ஆனால் போலீசார் அப்படி செய்யாமல் தாசில்தார், பி.டி.ஓ, அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவர் பத்மா முன்னிலையில் அந்த தண்ணீர்த் தொட்டியை இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளனர்.

கண்ணால் பார்த்த சாட்சி ஏதும் இல்லாத நிலையில் குற்றம் நடந்த சூழ்நிலையில் இருக்கும் ஆதாரங்கள் அனைத்தையும் கைப்பற்ற வேண்டும். ஆதாரங்களைக் கைப்பற்றுவதற்கு முன்பே தண்ணீர் தொட்டியை இடித்துவிட்டதால் மக்கள் பெரும் கோபத்துக்கு உள்ளாகிப் போராடுகிறார்கள். அந்த தண்ணீர் தொட்டியின் குழாயிலிருந்த மலத்தை டி.என்.ஏ ஆய்வு செய்வதற்கும் இந்த மக்களையே அழைக்கின்றனர். தொலைப்பேசிக்கும் இந்த மக்களையே அழைக்கின்றனர்.

ஏஆதாரங்களில் முதன்மையான ஆதாரமாக எடுத்துக் கொள்வது மோட்டிவ். இரண்டாவது லாஸ்ட் இன் தியரி. மூன்றாவது இன்கிரிமெண்டல் எவிடன்ஸ் என்று பார்ப்பது தான் வழக்கம். முதலில் மோட்டிவ் என்ன என்று பார்க்க அங்கே சென்று பார்த்த போது முதலில் இரட்டை டம்ளர் பிரச்சனை அங்கே இருந்து வருகிறது. இதனை எதிர்த்து சில மக்கள் போராடுகின்றனர். இறையனூர் என்ற கோயிலில் தலித் மக்களை உள்ளே விடாமல் இருப்பது மற்றொன்று. இவற்றிற்கெல்லாம் அடுத்தபடியாகக் கிராம சபைக் கூட்டத்தில் பத்மாவின் கணவராக இருக்கும் முத்தையா இதுவரை கட்டாத தண்ணீர் தொட்டியைக் கட்டி விட்டோம் என்று தவறாகக் கூறியதால், மக்கள் பெரும் கோபத்திற்கு உள்ளாகினர். இந்த பஞ்சாயத்துத் தேர்தலில் பத்மா அவர்களுக்கு ஓட்டுப் போட வேண்டும் என்றால் இந்த மக்களுக்கு நீங்கள் ஒரு தண்ணீர் தொட்டியைக் கட்டித் தருமாறு டேங்க் ஆபரேட்டராக வேலை செய்யும் ஒருவர் கேட்டிருக்கிறார்.

வேங்கை வயல் - தமிழக அரசு விளக்கம்
வேங்கை வயல் - தமிழக அரசு விளக்கம்

ஏற்கனவே தண்ணீர் தொட்டி இருந்தாலும் அங்கிருந்து தண்ணீர் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லும்படியாக எந்த வசதியும் செய்யப்படவில்லை. தண்ணீர் தொட்டி கட்டி தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தாலும் அதைச் செயல்படுத்தவில்லை. இதனால் மக்களிடையே பெரும் பிரச்னை இருந்து வந்துள்ளது. டேங்க் ஆபரேட்டர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் தண்ணீர் தொட்டி கட்டி தருகிறேன் என்பதால்தான் நான் ஓட்டு வாங்கிக் கொடுத்தேன் என்று டேங்க் ஆபரேட்டர் சங்கர் கூறுகிறார். எனவே டேங்க் ஆபரேட்டரை அந்தப் பணியிலிருந்து நீக்கி வேறொருவரை அந்த பணியில் வைக்கின்றனர். அவரைப் பணியிலிருந்து நீக்கியது தவறு என்று மக்கள் போராடுகின்றனர். தன்னை அம்பலப்படுத்தியதால் இன்றைக்கும் வேறொருவரைப் பணியில் சேர்த்தாலும் இவரைப் பணியில் சேர்ப்பதில்லை.

அது மட்டுமல்லாமல் லேண்ட் பிரச்னை என்று பார்த்தோம் என்றால் காலம் காலமாக ஒருவருடைய லேண்ட் ஒன்று உள்ளது. அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய லேண்டை இந்த மக்களுக்குக் கொடுத்து விட்டுச் சென்றுள்ளார். இந்த மக்கள் அங்கே கொஞ்சம் லேண்டுகளை வைத்திருக்கின்றனர். அதை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என்று சில ஆதிக்க சாதிக்காரர்கள் முயற்சி செய்கிறார்கள். இப்படிப் பல பிரச்னைகள் உள்ளன. இதற்கிடையில் திடீரென இந்த வழக்கில் மூல வேரான அந்த தொட்டியை இடித்து விட்டு அங்கே கிடைத்த வெறும் மலத்தை டிஎன்ஏ ஆய்வு செய்து பார்த்தீர்கள். அந்த ரிப்போர்ட்டின் முடிவில் அது யார் எனக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கனகராஜ் என்ற புகார்தாரர் புகார் கொடுத்துள்ளார். அவருக்கு வன்கொடுமை சட்டத்தின் கீழ் 2015 -ல் திருத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் சேப்டர் 4 ஏ வில் 15 ஏவில் உரிமை கொடுத்திருக்கிறார்கள் என்னவென்றால், 'எவ்ரி ஸ்டேஜ் ஆப் இன்வெஸ்டிகேஷன் ஷுட் பி இன்டிமேட் டு தி விக்டிம் ஆர் அசோசியேஷன்' என்பதின் அடிப்படையில் அவருக்கு இந்த வழக்கின் ஆதாரங்களைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றும் கொடுக்கவில்லை. ஒரு எவிடன்ஸும் கொடுக்கப்படவில்லை ஏன் ஒரு இன்ஃபர்மேஷன் கூட கொடுக்கப்படவில்லை. ஆனால் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

சில பேர் பொதுநல வழக்காகத் தொடுத்துள்ளனர். சிலர் சி.பி.ஐ-க்கு மாற்றுங்கள் என்றும் சொல்கிறார்கள். அவர்களுக்கு ஸ்டேட்டஸ் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. அப்படி ஏதும் இவருக்கு இந்த வழக்கைப் பற்றிய தகவல்கள் சொல்லப்படவில்லை. 41ஏ-ன் படி குற்றம் சாட்டப்பட்ட நபரை, அந்த குற்றம் 7 ஆண்டுகளுக்குள் தண்டிக்கக் கூடிய குற்றமாக இருந்தால் அவரை அறிவிப்பு கொடுத்து அழைத்து விசாரணை செய்ய சி.ஆர்.பி.சி-யில் இடம் உண்டு.

வேங்கைவயல்
வேங்கைவயல்

விசாரணையில் அவர் குற்றவாளி என்பது உறுதியானால், அவரை ரிமாண்ட் செய்யலாம். இதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட அந்த மூன்று பேரையும் கடந்த ஜூன் மாதத்தில் அழைத்து விசாரித்த போது அந்த மூவரும் தங்கள் வழக்கறிஞர் மற்றும் ஊர் மக்களுடன் சென்றிருக்கின்றனர். எதற்கு அழைத்தார்கள் என்ற சரியான தகவல் ஏதும் அவர்களுக்குத் தரப்படவில்லை. ஆனால் இவர்களை அழைத்த சி.பி.ஐ அதிகாரிகள் நீங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்ளுங்கள், பிறகு நாம் இந்த வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கின்றனர். நாங்கள் செய்யாத குற்றத்தை எப்படி ஒப்புக் கொள்வது என்று கேட்டுள்ளனர். பின் அவர்களை விட்டு விட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றம் இதை எடுத்துக்காட்டி உள்ளது. அதாவது, புலனாய்வு செய்கின்றபோது, 'What is the point of an investigation? When an investigation is being conducted the investigation is a prerogative of the part of the officer in whom normally even the court cannot interfere.' புலனாய்வு செய்யப்பட்ட அந்த அறிக்கை பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்காமல் மீடியாக்களுக்குக் கிடைத்திருக்கிறது. இது ஏன் பாபிரிகேட்டட் ஆக இருக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்புகிறது. கிடைத்த ஆதாரங்களைச் சம்பந்தப்பட்ட நபருக்குத் தந்திருப்பது அவசியம். ஓராண்டுக் காலமாகப் புகார்தாரருக்கே தராத அந்த புலனாய்வு அறிக்கை‌ ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டில் உள்ளது ஏன்? இவற்றை ஒப்புக்கொள்ள முடியாது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The investigation as not being conducted properly in accordance with the law.157 crpc , when you say investigation you don't just look at the first mistake you also look at it and say it's nothing but your document to set the ball of investigation in devotion. அங்கே யாரெல்லாம் இருக்கிறார்கள், தலித் மக்களின் பிரச்னைகள் என்னென்ன என்று பாரபட்சம் இல்லாமல் அந்த புலனாய்வைச் செய்திருக்க வேண்டும். ஆனால் இப்படி ஏதும் செய்யாமல் பத்மா என்கிற பஞ்சாயத்துத் தலைவர் தனது கணவரைப் பழி வாங்குவதற்காகச் செய்தார் என்பதை எப்படி நம்ப முடியும்.

பின்பு அவர்கள் ஒரு வழக்கைப் பரிந்துரைக்கவும் இந்த மூவர்தான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பதையும் கூறுகின்றனர். இதை ஒரு கம்ப்ளைன்ட் என்று நம்மால் சொல்ல முடியும். அப்படியானால் இதைப்பற்றி புகார்தாரர் கனகராஜ் அவர்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். ஏனென்றால் பாதிக்கப்பட்ட பெண் இவருடைய மகள், ஆனால் அவருக்கு எந்தவித தகவலும் அளிக்கப்படவில்லை. வன்கொடுமை சட்டத்தின் படி ஒவ்வொரு ஸ்டேஜ் ஆப் இன்வெஸ்டிகேஷனில் கிடைத்த தகவலை அவருக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தரப்படவில்லை. அவருக்கு இந்த தகவலைப் பற்றி எதுவும் தெரிவிக்காமலேயே நீதிமன்றத்தில் வெளிப்பட்ட பின் பத்திரிகைகளில் படம் வந்திருக்கிறது. நீங்கள் சொல்வதற்கு முன்பாகவே அவர்கள் பேசியதாக இருக்கும் தொலைப்பேசி ஆதாரங்களை ஊடகங்கள் வெளியிடுகிறது. இது சந்தேகத்திற்குரியது. நீங்கள் இந்த தகவலைப் புகார்தாரருக்கு முதலில் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல், கோர்ட்டில் ஸ்டேடஸ் ரிப்போர்ட்டாக வெளிவந்தபின் ஊடகங்களில் வெளிவந்துள்ளது என்றால் அது கண்டிப்பாக ஃபேப்ரிகேட்டட் எவிடன்ஸ் தான்.

இந்த ரிப்போர்ட்டையே நாம் ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம். திடீரென எடுத்த எடுப்பிலேயே இவர்தான் அந்த குற்றத்தைச் செய்தார் என்று முடிவு செய்தல் கூடாது. ஊடகங்களில் இப்படி மலம் கலந்துள்ளது என்பதைத் தெரிவித்தது சுதர்சன் என்பராக இருக்கலாம். ஆனால் இந்த ஆதாரங்களை வைத்து இவர்தான் தண்ணீர் தொட்டியில் கலந்தார் என்று எப்படி முடிவு செய்ய முடியும். தண்ணீர் தொட்டியை இடிப்பதற்கு முன் இந்த புலனாய்வைச் செய்திருக்க வேண்டும். அதாவது தண்ணீர் தொட்டியில் மலம் இருப்பதாக எடுக்கப்பட்ட அந்த போட்டோ, தொலைப்பேசியில் பேசிய அந்த உரையாடல்கள் மற்றும் வாய்ஸ் டெஸ்ட் இந்த மூன்றை வைத்துக்கொண்டு ஒரு முழுமையான பார்ன்சிக் ரிப்போர்ட்டாக இருக்கிறதா என்பதை பார்த்துத்தான் சொல்ல முடியும். ஆனால், புலனாய்வைச் செய்வதற்கு முன்பே இவர்தான் அந்த குற்றவாளி என்று முடிவெடுத்துவிட்டு அந்த புலனாய்வைச் செய்தது போல் உள்ளது. வன்கொடுமை என்பது ஒரு சீரியஸ் அபன்ஸ் இதை சி.பி.ஐ-க்கு மாற்றிய பிறகு முதலில் யார் அந்த தொட்டியை இடித்தார்கள், ஏன் இடித்தார்கள் என்று விசாரணை செய்து இருக்க வேண்டும். ஏன் உண்மையை மறைக்கக் கூட அவர்கள் அந்த தொட்டியை இடித்து இருக்கலாம் அல்லவா, எனவே அந்த கோணத்திலும் விசாரணை செய்திருக்க வேண்டும்.

ஏனென்றால் அங்கே பி.டி.ஓ, தாசில்தார், பஞ்சாயத்துத் தலைவர் பத்மா இவர்கள் எல்லோரையும் வைத்துக் கொண்டுதான் அந்த தண்ணீர் தொட்டியை இடிக்கிறார்கள். இடிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதிலிருந்து விசாரணை தொடங்கி இருக்க வேண்டும்.

அந்த தண்ணீர் தொட்டியை இடிக்காமலிருந்திருந்தால் அதிலிருந்த அந்த மலத்தையும் அந்த தண்ணீரையும் எடுத்து நாம் ஆய்வு செய்து இருக்கலாம் இதை விட்டுவிட்டு அந்தத் தொட்டியிலிருந்து வந்த குழாயிலிருந்த அந்த எவிடன்ஸை வைத்து ஆய்வு செய்தது ஏன்? மிக முக்கியமாகத் தொட்டியை யார் இடித்தார்கள் என்பதை விசாரணை செய்திருக்க வேண்டும். அதைப்பற்றி எந்த குறிப்பும் எந்த அறிக்கையில் இல்லை. அப்பொழுது உண்மையான எவிடன்ஸை மறைத்து விட்டு உங்களுக்குத் தேவையான முறையில் புலனாய்வு செய்கிறீர்கள் என்பது உறுதியாகிறது.

இந்த ஆதாரங்கள் மதிப்புள்ளதாகவும் உண்மை தன்மையாகவும் இருக்கிறதா?

இந்த ஆதாரங்கள் நமக்குச் சித்தரிக்கப்பட்டவையாகத் தோன்றும் போது இதை எதிர்த்து நாம் முறையிடுவோம். இந்த வழக்கை நாங்கள் போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ-க்கு மாற்ற அனுமதி கோருகிறோம். எப்போதும் ஆட்சி தான் மாறுமே தவிரக் காட்சிகள் மாறுவதில்லை. காவல்துறை சாதி ரீதியாகவே செயல்படுகிறது என்பதைப் பல வழக்கில் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

சி.பி.ஐ-க்கு சென்றால் மட்டும் இந்த வழக்கில் சரியான ஒரு தீர்வு கிடைத்து விடுமா?

இது ஒரு மக்கள் பிரச்னையாக இருப்பதனால் ஒரு சரியான தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதனாலேயே நாங்கள் சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரினோம். அப்போதுதான் கோர்ட் இந்த வழக்கை மானிட்டர் செய்யும். அப்படிச் செய்ய இயலாது என்பதால்தான் நாங்கள் சி.பி.ஐ-க்கு மாற்ற வலியுறுத்தினோம். ஆளுகிற கட்சி சமூக நீதிக்காகப் போராடுகிறது என்பதை நாம் மறுக்கவில்லை, அடிப்படையில் பல மாவட்டங்களில் தலித்துக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் பல உள்ளன. உதாரணத்திற்குத் தீவட்டிப்பட்டி, பள்ளிக்கரணை, பல்லாவரம் போன்ற இடங்களில் தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நடப்பதைப் பார்க்கிறோம். இங்கே ஆட்சிதான் மாறி உள்ளது. தவிர காவல்துறை மாறவில்லை.

வேங்கைவயல்
வேங்கைவயல்

அரசாங்கத்திற்கும் போலீஸிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?

காவல்துறையில் 100-ல் 90 பேர் அளவிற்கு வன்கொடுமை சட்டத்தையோ அதன் ஆன்மாவையோ புரிந்து கொண்டவர்கள் கிடையாது. காவல்துறை அந்த மாவட்டத்தில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களுக்குப் பின்னணியாகச் செயல்படுகின்றனர்.

அதாவது பிரசம் என்ற பாயிண்டை கோகுல்ராஜ் வழக்கில் பார்த்தோம். சாட்சியே இல்லாத போதும் அடிப்படை உண்மையைக் கொண்டு வந்து நிறுத்தும் போது அந்த விசாரணையை நீதிமன்றமும் ஒப்புக்கொள்ளத் தகுந்ததாக இருந்தது. தான் குடிக்கிற தண்ணீரிலேயே தானே மலத்தைக் கலந்தான் என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். அதற்காகக் கற்பனை செய்ய வேண்டாம் ஃபேக்சுவலாக என்ன நடந்தது என்பதைச் சிந்தியுங்கள். ஆர்.ஜே.ஆர் மருத்துவமனையில் நடந்த குற்றத்தில் பாரன்சிக் ரிப்போர்ட் மூலம் ஒருத்தருக்கு மட்டும் தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை, பல பேருக்குத் தொடர்பிருக்க வாய்ப்பு உண்டு எனக் கூறுவது வழக்கை உடனே முடிக்க வேண்டும் என்பதற்காகச் செய்வது. அதைப் போன்று இந்த வழக்கிலும் யார் குற்றம் செய்தார்களோ அவர்களை எந்த விசாரணைக்கும் உட்படுத்தாமல் முடிவு எடுத்துக்கொண்டு விசாரிப்பதால் தான் இந்த முடிவுக்கு வந்துள்ளனர் என்பது எனது கருத்து.

இந்த வழக்கின் விசாரணையைக் கண்காணிக்க இருந்த ஒரு நபர் நீதிபதி ஆணையம் இந்த ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டுக்கு ஒப்புதல் கொடுத்து தானே இந்த ரிப்போர்ட் வெளிவந்திருக்கிறது?

அவருடைய முடிவை ஏற்றுக் கொள்வது அவசியம் கிடையாது, it is just a recommendation report it as got no enforcement of law. அரசுக்குத்தான் எப்போதுமே இந்த பொறுப்பு. இந்த முடிவும் அவரது ரிப்போர்ட்டும் தனி. இதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

போலீசார் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கு முன் தகவல்களை வெளியிடுவது வழக்கின் போக்கை மாற்றுமா?

Trial by media என சுப்ரீம் கோர்ட் பல இடங்களில் சுட்டிக்காட்டி உள்ளது. வழக்கு நடக்கும்போது வழக்கில் உள்ள சம்பவங்களை எடுத்துக் கூறலாம். ஆனால் வழக்கு நடப்பதற்கு முன்பே கருத்துக்களை உருவாக்குவது என்பது இன்றைக்கு உள்ள இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி உலகில் மிகவும் சாதாரணமாக உள்ளது. ஏற்கனவே உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் சொல்லி இருப்பது என்னவென்றால் இன்வெஸ்டிகேஷன் ஆபீஸ்சர் உடைய ரிபோர்ட் சார்ஜ் இன் செய்யும் வரை யாருக்கும் வெளியே தெரியக் கூடாது. ஆனால் வன்கொடுமை செய்யப்படும் வழக்குகளில் புகார்தாரர்களுக்குத் தெரியலாம் என்று கூறுகின்றனர். இந்த வழக்கில் புகார்தாரர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் வெளியே சென்று விட்டதால் இந்த விசாரணை ஒரு கறை படிந்த நிகழ்வாக உள்ளது.

உண்மையான ஆதாரங்களைக் கைப்பற்றவில்லை என்ற போது சி.பி.ஐ-க்கு மாற்றினால் மட்டும் எப்படித் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

நானும் செங்கரசும்தான் ஸ்ரீமதி மாடியிலிருந்து கீழே விழுந்த கேசில் ப்ரட்டஸ்ட் பெட்டிஷன் செய்துள்ளோம். அந்த வழக்கில் இரண்டாவது நாளே டிஜிபி ஸ்ரீமதி தற்கொலை என்று சொல்கிறார். ஆனால் சி.பி.ஐ-க்கு கேஸ் மாறி இன்வெஸ்டிகேஷன் சென்று கொண்டிருக்கிறது. ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டை வைத்துக்கொண்டு இரண்டு நீதிபதிகள் தற்கொலை என்ற முடிவைச் சொல்கின்றனர். இதனை சுப்ரீம் கோர்ட் முற்றிலும் தவறான முடிவு எனச் சுட்டிக்காட்டியது. இங்கிலீஷ் டிரிகேஷன் ஆபீசர் பிணை கேட்டார்கள் என்றால் பிணையில் பதில் சொல்ல வேண்டும் அட்டாப்ஸி ரிப்போர்ட்டுக்கு மற்றொரு டாக்டர் கேட்டால் அதற்குப் பதில் கூறுங்கள் அதை விட்டுவிட்டு நீங்கள் முடிவைக் கொடுக்காதீர்கள் என்றது. காலை ஐந்தரை மணிக்குச் சம்பவம் நடந்தது, 5.30 மணிக்கு அம்மா செல்விக்குத் தகவல் கொடுக்கப்பட்டது, பதறி அடித்துக் கொண்டு அந்த அம்மா கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சென்று பார்க்கும் போது ஸ்ரெச்சர்ல் முழுவதும் ரத்தம். ஆனால் யாரும் பதில் சொல்லவில்லை.

மீண்டும் அங்கிருந்து வந்து பள்ளியில் பார்த்தபோது விழுந்த இடத்தில் ஒரு சொட்டு ரத்தம் கூட கிடையாது. 11.30 மணி அளவில் புகார் வாங்குகிறார்கள். ஆனால் காலையிலேயே டிஎஸ்பி வந்து அந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டு சென்றிருக்கிறார். அந்த பாயிண்டை நாங்கள் முன்னிறுத்துகிறோம். அந்த ஃபர்ஸ்ட் இன்வெஸ்டிகேசனை ஏன் சர்ப்ரைஸ் செய்தீர்கள், காவல்துறைக்கு யார் தகவல் கொடுத்தது போன்ற பல கேள்விகளை நாங்கள் ப்ரட்டஸ்ட் பெட்டிஷன்ல முன் முதன்மைப்படுத்துகிறோம். ஒரு முடிவை எடுத்துக்கொண்டு வந்து விசாரணை செய்த ஒரு சார்ஜ் சீட் ஆகத் தான் இந்த வழக்கை நான் பார்க்கிறேன். சரியான விசாரணையாக இருந்தால் ஏன் அந்த தண்ணீர் தொட்டியை இடித்தார்கள், யார் இடித்தார்கள் என்ற நிலையிலிருந்து தொடங்க வேண்டும். இப்படித் தொடங்கவில்லை என்றதால்தான் சி.பி.ஐயைக் கேட்கிறேன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ - ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு... கதறித் துடித்த பெண்கள்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட வானமாதேவி, கொடுக்கன்பாளையம், தெத்தங்குப்பம், கட்டாரா சாவடி உள்ளிட்ட கிராமங்களில் அரசுக்கு சொந்தமாக 65.75 ஹெக்டேர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் அப்பக... மேலும் பார்க்க

'சீமான் சொன்னதை நம்பி ஏராளமான பணம் கொடுத்து ஏமாந்தோம்' - கொளத்தூர் மணி வேதனை

திராவிடர் விடுதலை கழகம் தலைவர் கொளத்தூர் மணி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " ஈழப் போராட்டம் ஆயுத போராட்டமாக மாறியபோது, அந்த போராளி குழுக்களுக்கு தமிழகத்தில் ஆயுதப் பய... மேலும் பார்க்க

"பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்யும் சூழல் உள்ளது" - கனிமொழி எம்.பி

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நடைபெற்றது.இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க துணைப் பொதுச் செயல... மேலும் பார்க்க

20 கிலோ தங்கம், 300 கேள்விகள்; தாம்பரம் ரூ.4 கோடி விவகாரத்தில் புதுச்சேரி பாஜக எம்.பி-யிடம் விசாரணை!

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனையில் இருந்த பறக்கும் படையினர், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்தப் பணத்... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடங்கள்!' - கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 37ஆவது கூட்டம் இன்று கூடியது. டெல்லியில் உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே... மேலும் பார்க்க