செய்திகள் :

வேங்கைவயல்: ”தனி மனித பிரச்னையே காரணம்” - நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் வாதம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அதனால், இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வேங்கைவயல்

இதுதொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணையில் அரசுத்தரப்பில், வேங்கைவயல் வழக்கில் 389 சாட்சிகளும், 196 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் உள்ள எண்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதேபோல 87 டவர் லொகேஷன்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் உள்ள புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதனடிப்படையில் 31 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆகவே, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து தீவிர நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

வேங்கைவயல் குடிநீர்த்தொட்டி

இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, வேங்கைவயல் வழக்கு குறித்த முழுமையான அறிக்கையைத் தாக்கல் செய்தார். தொடர்ந்து, "வேங்கைவயல் விவகாரத்தில் சாதிய மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ காரணம் கிடையாது. இருவருக்குள்ளே ஏற்பட்ட தனி மனித பிரச்னையே இது போன்று நடக்கக் காரணம். கடந்த 2 வருடங்களாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து, விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் 3 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்" என்று பேசியிருக்கிறார்.

``அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காத காங்கிரஸ், என்னை ஜெய்பீம் சொல்லச் சொல்கிறது '' -பிரதமர் மோடி

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி நடைபெற்றது.இந்த பட்ஜெட் வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்று பெரும் பேசுபொருளாகியிருந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், பட்ஜெட் ம... மேலும் பார்க்க

இந்தியர்களுக்கு கை விலங்கு: `சட்டப்படிதான் அமெரிக்கா நடந்தது, ஆனால்..' -ஜெய்சங்கர் சொல்வதென்ன?

அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய 104 இந்தியர்களை முதல் கட்டமாக வெளியேற்றியுள்ளது அமெரிக்கா. அவர்கள் அமெரிக்காவின் சி17 ராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்... மேலும் பார்க்க

``சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்ஸ்..'' -இந்தியர்களின் கை கால்களில் விலங்கிட்டு அனுப்பிய அமெரிக்கா

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற நாள்முதல், அமெரிக்காவில் ஏற்கெனவே சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அதிபரின் உத்தரவின்படி அமெரிக்க ராணுவம் வெளியேற்றிவருகிறது. அதன்படி, சட்டவிரோதமாக அமெரிக்க... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய ஜூ.வி; கழிவறையை சுத்தம் செய்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

திருப்பத்தூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் வந்து பார்வையிட்ட கழிவறை, மூன்றே மாதங்களில் மீண்டும் மோசமான நிலைக்குச் சென்றது.எவ்வித பராமரிப்புமின்றி மிக அசுத்தமான நிலையில் ‌தூய்மையற்று சுகாதார ... மேலும் பார்க்க

WHO: 'அடுத்தடுத்து விலகும் அமெரிக்கா, அர்ஜென்டினா... அதிகரிக்கும் சீனா-வின் ஆதிக்கம்?' | Explained

கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் போட்ட முதல் கையெழுத்துகளில் ஒன்று, 'உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா விலகுவது' குறித்ததாகும். 'உலக சுகாதார நிறுவனம் கொரோனா பேரிடரை ச... மேலும் பார்க்க

``சீமான் ப்யூர் வலதுசாரி... NTK முன்வைப்பது பாசிசம்!” - VCK ஆளூர் ஷாநவாஸ் பேட்டி

``2002-03 காலகட்டத்தில் பெரியாரை வி.சி.க-வும் கடுமையாக சாடியிருக்கிறதே... எதோ முதன்முதலாக பெரியாரை சீமான்தான் விமர்சிப்பதுபோல பேசுகிறீர்களே!”``பெரியார் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் நாம் ... மேலும் பார்க்க