ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
வேதாரண்யம் பகுதியில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம்
வேதாரண்யம் பகுதியில் ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்‘ திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
வேதாரண்யம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து கள ஆய்வு மேற்கொண்டாா்.
வேதாரண்யம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க நடைபெற்ற சிறப்பு மதிப்பீட்டு முகாம், அகஸ்தியம்பள்ளியில் உப்பளங்கள் மூலம் உப்பு உற்பத்தி செய்யப்படும் முறைகளையும், கோவில்பத்து நெல் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் பராமரிப்பு, தரம் மற்றும் நெல்களின் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தாா்.
ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ. ரூபன் சங்கா் ராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி மா.கா.சே.சுபாஷினி, தனித்துணை ஆட்சியா் காா்த்திகேயன், வேதாரண்யம் கோட்டாட்சியா் எஸ்.திருமால், வட்டாட்சியா் என்.சக்ரவா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.