புதுச்சேரி பல்கலைக்கழகம்: பாலியல் புகார் பேராசிரியரின் பதவி பறிப்பு! - நடவடிக்கை...
"வேலுநாச்சியாரின் மறு உருவமாக உள்ள அக்கா வானதி சீனிவாசன்.!" - ஆர்.பி.உதயகுமார் புகழாரம்
'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற பிரசார பயணத்தை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் தொடங்கினார்.

நேற்று மாலை மதுரையில் நடைபெற்ற பிரசாரப் பயணம் தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகனுடன், கூட்டணி கட்சித் தலைவர்கள் ஜி.கே.வாசன், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, "தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்ட கண்ணகி நீதிகேட்ட மதுரை மண்ணில் பச்சை தமிழர் நயினார் நாகேந்திரன் புறப்பட்டுள்ளார். திமுக ஆட்சி மாற்றத்திற்கு கவுன்டவுன் தொடங்கியுள்ளது. திமுக மன்னராட்சிக்கு, சர்வாதிகார ஆட்சிக்கு கவுன்டவுன் தொடங்கியது.
அமித் ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி 100 நாள் வேலை திட்டத்திற்கான 2,999 கோடி நிதியை பெற்றுத் தந்தார். ஆனால் இவர்களால் 100 நாட்கள் வேலைத் திட்ட சம்பளத்தை கூட கொடுக்க இயலவில்லை. உதயநிதிக்கு எப்போதும் நம் கூட்டணி பற்றிய சிந்தனைதான். அமித் ஷா ஜியை சந்தித்த பின் திமுக மிரண்டு போயிருக்கிறது.

வேலுநாச்சியாரின் மறு உருவமாக உள்ள அக்கா வானதி சீனிவாசன் சட்டமன்றத்தில் பேசினால் நடுங்கிவிடுகிறார்கள்; எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறுகிறார்கள், நயினார் நாகேந்திரனின் புரட்சிப் பயணத்தில் ஆட்சிமாற்றம் உறுதி, திமுக ஆட்சி குப்பையில் போடப்படும்" என்றார்.