செய்திகள் :

வேலூரில் பிடிபட்ட யானை தந்தம் - பாஜக நிர்வாகி உட்பட 9 பேரிடம் வனத்துறை தீவிர விசாரணை

post image

வேலூர் அடுத்துள்ள அரியூர் மலைக்கோடியைச் சேர்ந்தவர் சம்பத் (56). இவரின் வீட்டில் யானை தந்தம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனம் மற்றும் வனஉயிரின குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேலூர் வனச்சரக அலுவலர் புருஷோத்தமன் தலைமையிலான வனக்காவலர்கள் சம்பத்தின் வீட்டில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அங்கு 4 துண்டுகளாக வெட்டிப் பதுக்கப்பட்டிருந்த யானை தந்தம் மற்றும் யானையின் பல்லை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, சம்பத்தைப் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தியதில், பின்னணியில் பெரிய கடத்தல் நெட்வொர்க் இருப்பதும் தெரியவந்தது.

பிடிபட்ட யானை தந்தம்

விசாரணை அடிப்படையில், முதற்கட்டமாக கடத்தல் நெட்வொர்க்கைச் சேர்ந்த சரத் என்கிற சரத்குமார், தரணிகுமார் உள்ளிட்ட 9 பேரை பிடித்திருக்கின்றனர். இதில் சரத் என்கிற சரத்குமார் என்பவர் பா.ஜ.க-வின் வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளராக கட்சிப்பதவியில் இருப்பதோடு, டாஸ்மாக் ஊழியராகவும் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் யானையை வேட்டையாடி அதன் தந்தத்தை வெட்டி எடுத்தார்களா அல்லது பிற நபர்களிடம் இருந்து வாங்கி வந்து விற்பனைச் செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தார்களா? என கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/VaigainathiNaagarigam

Whatsapp : வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்களை பகிர்ந்த மெட்டா; ரூ.213 கோடி அபராதம் விதித்த CCI ஆணையம்!

உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட பல தளங்களை இயக்கி வருகிறது. இதில் பாமர மக்கள் வரை சென்ற தளம்தான் வாட்ஸ்அப். இலவச வீடியோ, ஆடியோ கால், இளைஞர்களை கவரும் வகை... மேலும் பார்க்க

`ஒரு கொலை இல்லை... இரண்டு கொலை’ - கோவை போலீஸை அதிரவைத்த வாக்குமூலம்

கோவை மாவட்டம் வாகராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். விசைத்தறி நெசவு தொழிலாளியாக இருந்தார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தன் வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இள... மேலும் பார்க்க

சென்னை: பெண் இன்ஜினீயர் கொடுத்த பாலியல் புகார் - பாடகர் குருகுகன் சிக்கியது எப்படி?

சென்னையைச் சேர்ந்த பெண் இன்ஜினீயர் ஒருவர், கடந்த 25.10.2024-ம் தேதி பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார் . அதில் கூறியிருப்பதாவது, ``சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

`யார், யாரிடம் இடங்களை அபகரித்தார்?' - என்கவுன்ட்டரில் உயிரிழந்த ரௌடி சீசிங்ராஜா வீடுகளில் ரெய்டு

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட சீசிங் ராஜா, சென்னை கிழக்கு தாம்பரத்தில் வசித்து வந்தார். நில விவகாரம் தொடர்பான கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டு வந்த சீசிங்ராஜா மீது 6 கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என 39 ... மேலும் பார்க்க

போலி பணி ஆணை; ரூ.99 லட்சம் மோசடி... கைதான ஊராட்சி மன்றத் தலைவி - காங்கிரஸில் சலசலப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே அமைந்துள்ளது கொல்லஞ்சி ஊராட்சி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சலோமி இந்த ஊராட்சி மன்ற தலைவியாக இருந்துவருகிறார். இவர் மகிளா காங்கிரஸ் நிர்வாகியாகவும் உள்ளார். மா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: முன்னாள் அமைச்சர் மீது கல்வீச்சு தாக்குதல்; தலையில் ரத்தக்காயம்.. என்ன நடந்தது?

இறுதி கட்ட தேர்தல் பிரசாரம்...மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியில் இருக்கிறார். இம்முறை சட்டமன்ற தேர்தலில் தனது மகன் சலீல் தேஷ்முக்கை கடோல் தொக... மேலும் பார்க்க