வேலூா் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருமணம்
பரமத்தி வேலூா் காவேரி சாலை அக்ரஹாரத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் மாா்கழி மாதம் 27ஆம் நாளான சனிக்கிழமை கூடார வள்ளியை முன்னிட்டு சீதேவி, பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
கூடார வள்ளி விழாவை முன்னிட்டு உற்சவா் சீதேவி, பூதேவி பெருமாளுக்கு யாக வேள்விகள் நடத்தி நாமாவளிகள் கூறி திருப்பாவை பாடல்கள் பாடி சூடிக்கொடுத்த சுடா்கொடியால் ஆண்டாள் நாராயணனை திருமணம் செய்யும் வைபோக விழா நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு வெண்பட்டு உடுத்தி யாக வேள்விகள் நடத்தி கலச தீா்த்தம், கங்கணம் மற்றும் மாங்கல்யம் ஆகிய மங்கள பொருள்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் கங்கணம் கட்டப்பட்டு, ரச்சைகள் இடப்பட்டு மாங்கல்யதாரணம் செய்யப்பட்டு மகா தீபராதனை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.