செய்திகள் :

வேலைக்கு போகாமல் மாதம் ரூ.1.6 லட்சம்; சம்பளமாக வந்த லஞ்சம்; அரசு அதிகாரியின் மனைவி சிக்கியது எப்படி?

post image

ராஜஸ்தான் மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை இணை இயக்குநராக இருப்பவர் பிரத்யூமன் தீட்ஷித். இவரது மனைவி பூனம். தீட்ஷித் மனைவி இரண்டு ஆண்டுகள் இரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் செல்லாமல் சம்பளம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஓரின்ப்ரோ சொலிஷன்ஸ் மற்றும் ட்ரீஜென் சாப்ட்வேர் லிமிடெட் போன்ற கம்பெனிகளில் 2019-20ம் ஆண்டுகளில் பூனம் வேலை செய்ததாகக் கூறி அந்த இரண்டு கம்பெனிகளும் பூனம் வங்கிக்கணக்கில் ரூ.37.54 லட்சத்தை வரவு வைத்திருக்கின்றன. ஆனால் பூனம் அந்த கம்பெனிக்கு வேலைக்குச் செல்லவில்லை.

மாறாக அந்த கம்பெனி தீட்ஷித் மூலம் அரசு துறைகளில் டெண்டர் பெற்று இருக்கிறது. அரசு டெண்டர் வழங்க தீட்ஷித் லஞ்சமாக வாங்காமல் அந்தப் பணத்தைத் தனது மனைவி அவர்களது கம்பெனியில் வேலை செய்வதாகக் கூறி சம்பளம் என்ற பெயரில் லஞ்சத்தை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மனைவி பூனம்
மனைவி பூனம்

இது தொடர்பாக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரிக்குமாறு உயர் நீதிமன்றம் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்குமாறு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத் தொடங்கியது.

விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்துள்ளன. விசாரணையில் பூனம் சம்பந்தப்பட்ட இரண்டு கம்பெனிக்கும் சென்றது கூட கிடையாது என்றும், அக்கம்பெனி எங்கு இருக்கிறது என்று கூட அவருக்குத் தெரியாது என்றும் தெரிய வந்துள்ளது. ஆனால் அவர் தங்களது கம்பெனியில் வேலை செய்தார் என்று கூறி இரு கம்பெனிகளும் பூனமின் 5 வங்கிக்கணக்குகளில் ரூ. 37.54 லட்சத்தை அனுப்பி இருக்கிறது. அதுவும் பூனம் ஒரே நேரத்தில் இரண்டு கம்பெனிகளில் வேலை செய்வதாக கணக்கு காட்டி இருக்கின்றனர்.

தனது மனைவி அக்கம்பெனிகளில் வேலை செய்தார் என்பதைக் காட்ட அட்டெண்டென்சில் தீட்ஷித் கையெழுத்து போட்டுள்ளார். ஒவ்வொரு மாதமும் தனது மனைவியின் வங்கிக்கணக்கில் ரூ.1.60 லட்சம் ரூபாய் சம்பளம் என்று குறிப்பிட்டு வரும் வகையில் தீட்ஷித் ஏற்பாடு செய்துள்ளார். அந்த லஞ்ச பணத்திற்காக ராஜஸ்தான் அரசுக்குச் சொந்தமான ராஜ்காம் என்ற நிறுவனம் மேற்கண்ட இரு நிறுவனங்களுக்கும் டெண்டர் கொடுத்து இருக்கிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆணவக்கொலையால் சீரழிந்த இரண்டு குடும்பங்கள் - `சாதி' யால் பறிபோன உயிர்கள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு இராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரியான ராமசந்திரன் (24) பால் கறவை தொழில் செய்து வந்திருக்கிறார். அப்பா செல்வம் ஆட்டோ ஒட்டுநர். உடல்நிலை சரியில்லாத நிலையில் ... மேலும் பார்க்க

சென்னை: நள்ளிரவில் பைக் டாக்ஸியில் பயணித்த வடமாநில இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - டிரைவர் கைது

வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கணவருடன் சென்னை, மதுரவாயலில் வசித்து வருகிறார். இவர், கடந்த 26.10.2025-ம் தேதி இரவு பைக் டாக்ஸி மூலம் பள்ளிக்காரணைக்கு சென்றிருக்கிறார். பின்னர், அதே பைக... மேலும் பார்க்க

மும்பை: `காவல் நிலையம் அருகே போதைப்பொருள் தொழிற்சாலை; 5 ஆண்டுகள் விற்பனை ஜோர்' - போலீஸார் அதிர்ச்சி

மும்பையில் எம்.டி. எனப்படும் ஒருவகையான போதைப்பொருளின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இந்த போதைப்பொருளை ஆய்வுக்கூடத்தில் எளிதில் தயாரித்துவிடலாம் என்பதால் சிலர் வீடுகளில் இதனை தயாரித்து விற்பனை செய்கின்ற... மேலும் பார்க்க

நெல்லை: வீடு புகுந்து மாணவிகள் மீது கொடூரமாக தாக்கிய ரவுடி கும்பல்; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

முன்பகை காரணமாக வீட்டுக்குள் நுழைந்த ரௌடி கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்து உடைத்து வீசியதுடன், உருட்டுக்கட்டைகளால் சரமாரியாக தாக்கினார்கள். அதில் நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.நெல்லை மாவட்... மேலும் பார்க்க

அடுக்குமாடியில் வெடித்த சிலிண்டர்; முன்னாள் காதலன் உதவியால் நடந்த கொலை - என்ன நடந்தது?

டெல்லி திமர்பூர் பகுதியில் இம்மாத மத்தியில் அடுக்கு மாடி குடியிருப்பில் ராம்கேஷ் மீனா (32) என்பவர் தீப்பிடித்து எரிந்து கிடந்தார். அவர் ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டு இறந்ததாக ஆரம்பத்தில் போலீஸார் நம்பி... மேலும் பார்க்க

அடகுவைத்த 8 கிலோ நகைகள் திருட்டு; வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவர் கைது - ஈரோட்டில் நடந்தது என்ன?

ஈரோடு முனிசிபல் காலனியில் ஈரோடு கூட்டுறவு நகர வங்கி பல ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை அடகு வைத்து உள்ளனர். இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி வங்கியின் தலை... மேலும் பார்க்க