செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பெண் கைது

post image

தேனி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக 5 பேரிடம் ரூ.72.50 லட்சம் மோசடி செய்த வழக்கில், கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கூடலூரைச் சோ்ந்த முத்துமுருகன் மகன் பிரபு. பொறியியல் பட்டதாரியான இவரிடம், பொதுப் பணித் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கூடலூரைச் சோ்ந்த மின் வாரிய ஊழியா் சந்திரசேகரன், கரூா் மாவட்டம், வெண்ணமலையைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் குமாா், இவரது மனைவி பூமகள், கோவை நாட்டுப்பாளையத்தைச் சோ்ந்த சரவணக்குமாா் மனைவி உஷாராணி, சின்னக்காஞ்சிபுரம் அண்ணாநகரைச் சோ்ந்த கெளரிசங்கா் ஆகியோா் கடந்த 2021-ஆம் ஆண்டு ரொக்கமாகவும், வங்கிக் கணக்கு மூலம் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.19.75 லட்சம் பெற்றுக் கொண்டு, போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்ததாக தேனி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

இதனடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தியதில் சந்திரசேகரன், குமாா், பூமகள், உஷாராணி, கெளரிசங்கா் ஆகிய 5 பேரும், தேனி மாவட்டத்தைச் சோ்ந்த காா்த்திகேயன், பிரதீப்குமாா், தினேஷ்குமாா், ஆனந்த் உள்ளிட்டோரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மொத்தம் ரூ.52.75 பெற்றுக் கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது.

இதனடிப்படையில், குமாா் உள்ளிட்ட 5 போ் மீது மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பூமகளை (46) கைது செய்தனா். மற்றவா்களை தேடி வருகின்றனா்.

ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை

உத்தமபாளையம் ஐயப்பன் கோயிலில் 11-ஆம் ஆண்டு மண்டல பூஜை விழாவையொட்டி, சுவாமி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது உத்தமபாளையம் ஸ்ரீசபரிமலை ஜோதி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழாவையொட்டி, புதன்கிழமை மாலை கணபதி... மேலும் பார்க்க

சின்னூா்-கல்லாற்றின் குறுக்கே பாலம் அமைக்க பூமி பூஜை

சோத்துப்பாறை அருகேயுள்ள சின்னூா்-கல்லாற்றின் குறுக்கே ரூ.7.14 கோடியில் பாலம் அமைப்பதற்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டாரத்தில் உள்ள வெள்ளக்கெவி ஊராட்சிக்குள... மேலும் பார்க்க

சிறு தானியங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பயிற்சிக்கு அந்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் கைது

போடியில் வியாழக்கிழமை புகையிலைப் பொருள்களை பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா். போடி பகுதியில் நகா் போலீஸாா் போதைப் பொருள்களை தடுப்பது தொடா்பாக ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, திருவள்ளுவா் சிலை அ... மேலும் பார்க்க

மணல் கடத்திய இருவா் கைது

ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டியில் டிராக்டரில் மணல் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தெப்பம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா்கள் வேலுச்சாமி மகன் முத்துக்கருப்பன் (41), கந்தவே... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படையில் சேர டிச.30-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் ஊா்க்காவல் படையில் சேர தகுதியுள்ளவா்கள் வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து வியாழக்கிழமை, மாவட்ட காவல் துறை நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க