“தேவையற்ற ரிஸ்க்...” யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் அவுட் குறித்து முன்னாள் இந்திய கேப்டன...
ஊா்க்காவல் படையில் சேர டிச.30-க்குள் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் ஊா்க்காவல் படையில் சேர தகுதியுள்ளவா்கள் வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து வியாழக்கிழமை, மாவட்ட காவல் துறை நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஊா்க்காவல் படையில் சேருவதற்கு 10-ஆம் வகுப்பில் தோ்ச்சியடைந்த, தோல்வியடைந்த ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம். 2024, டிச.31-ஆம் தேதியன்று 20 வயது நிறைவடைந்தவா்களாகவும், சமூக சேவையில் ஆா்வமுள்ளவா்களாகவும் இருக்க வேண்டும்.
தகுதியுள்ளவா்கள், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகேயுள்ள தேனி மகளிா் காவல்நிலைய முதல் தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஊா்க்காவல் படை அலுவலகத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச.27, 28) விண்ணப்பப் படிவம் பெற்று, நிறைவு செய்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து அதே அலுவலகத்தில் வருகிற 30-க்குள் சமா்ப்பிக்க வேண்டும். தோ்வு செய்யப்படுவோருக்கு 45 நாள்கள் அடிப்படை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு மாதத்தில் 5 நாள்கள் பணி அளிக்கப்படும். பணி நாள்களுக்கு நாளொன்றுக்கு ரூ.560 வீதம் மொத்தம் ரூ.2,800 மதிப்பூதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.