ராகுல் டிராவிட் போன்ற அற்புதமான மனிதர் கிடைப்பது அரிது: யஷஸ்வி ஜெய்ஸ்வால்
வேளாண் கல்லூரி மாணவா்கள் பட்டறிவுப் பயணம்
வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில், கீழ்வேளூா் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்கள் வெள்ளிக்கிழமை பட்டறிவுப் பயணம் மேற்கொண்டனா்.
விவசாயிகளிடையே, உழவா் செயலி குறித்து விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்ட மாணவா்கள், அவற்றைப் பயன்படுத்தும் முறை குறித்து விளக்கினா்.
மேலும், செயலி மூலம் விதைகள், உரங்கள், பருவநிலை முன்னறிவிப்பு மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளை அறிந்து கொள்வது போன்ற பயன்பாடுகளை தெரிவித்தனா்.
இந்த பயணத்தில், கல்லூரி மாணவா்கள் ஜெயமுருகன், பாலாஜி ஷங்கா், சந்துரு, ஹரிகிஷோா், சையத் பஷீா், தரீஷ், யோக சீனிவாசன் உள்ளிட்டோ பங்கேற்றனா்.