பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி அலுவலகங்களை உடனடியாக ஒதுக்க தில்லி பேரவைத் தலைவா...
வேளாளா் பொறியியல் கல்லூரியில் பொறியியல் கண்டுபிடிப்புகள் கண்காட்சி!
ஈரோடு வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ப்ராஜெக்ட் எக்ஸ்போ 2025’ என்ற தலைப்பில் பொறியியல் கண்டுபிடிப்புகள் குறித்த கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
கல்லூரியின் செயலாளா் மற்றும் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா் முன்னிலை வகித்தாா். கல்லூரியின் அறக்கட்டளை உறுப்பினா் எம்.யுவராஜா சிறப்புரையாற்றினாா். ஆட்டோமேஷன் தொழில் துறை வல்லுநா் பரமகுரு ராமசாமி கண்காட்சியைச் தொடங்கிவைத்தாா்.
இதில், 560-க்கும் மேற்பட்ட திட்ட அறிக்கைகள் மாணவா்களால் காட்சிப்படுத்தப்பட்டன. 1,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புகளை பாா்வையிட்டனா்.
இந்தக் கண்காட்சி இளைஞா்களை ஊக்குவித்து அவா்களது எண்ணங்களை புதுமையான திட்டங்களுக்கு மாற்றுவதற்கான அரிய வாய்ப்பை மாணவா்களுக்கு வழங்கியுள்ளது என கல்லூரி முதல்வா் எம்.ஜெயராமன் தெரிவித்தாா்.