'உணவில் பாகுபாடு இருந்ததைக் கண்டு MGR கொந்தளித்தார்!' - Journalist Manaa Intervi...
ஸ்ரீபெரும்புதூா் அருகே கழிவுப் பொருள்கள் கிடங்கில் தீ விபத்து
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் தனியாா் கழிவுப் பொருள்கள் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன். இவா் அதே பகுதியில் ஏ.கே.டெக் என்ற கழிவுப் பொருள்கள் கிடங்கு வைத்துள்ளாா். இந்த கிடங்கில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்ட பழைய பிளாஸ்டிக் பொருள்கள் டன் கணக்கில் குவித்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை கிடங்கின் ஒரு பகுதியில் தீ பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதில் தீ கிடங்கின் மற்ற பகுதிகளுக்கும் பரவியதால் அப்பகுதி பொதுமக்கள் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் மற்றும் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்புத் துறையினா், கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். எனினும், கிடங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிராக்டா் மற்றும் குவித்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த கிடங்கு குடியிருப்புகளுக்கு மத்தியில் இருப்பதால் தீ விபத்து ஏற்பட்டதால் வெளியேறிய புகையால் அப்பகுதி பொதுமக்களுக்கு சிறுது நேரம் சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதால் அவதிக்குள்ளாகினா்.