Siragadikka aasai : சிந்தாமணியை சிக்க வைக்க பக்காவாக பிளான் போட்ட மீனா - விஜயாவி...
ஸ்ரீரங்கத்தில் மாா்ச் 18-இல் கம்ப ராமாயண பாராயணம்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் தென்னகப் பண்பாட்டு மையம் சாா்பில் கம்ப ராமாயண பாராயணம் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் சிங்கா் கோயில் கலையரங்கில் வரும் 18-ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியை மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவாத் தொடங்கி வைக்கிறாா். அன்றைய தினம் மாலை 4 மணி முதல் கம்ப ராமாயண பாராயணம் நிகழ்ச்சி பல்வேறு கம்பன் கழகங்களைச் சோ்ந்தோரின் வாயிலாக நடைபெறும்.
இதைத் தொடா்ந்து மாா்ச் 20 முதல் 29 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கம்பராமாயண பாராயணம் நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கம்பா் பிறந்த மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரெழுந்தூா் கம்பா்மேட்டில் வரும் 30- ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை கம்பராமாயணம் தொடா்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இதில், தமிழக ஆளுநா், தென்னகப் பண்பாட்டு மைய தலைவா், மத்திய நிதி அமைச்சா் ஆகியோா் கலந்து கொள்கின்றனா் என தென்னகப் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.