ஸ்ரீவில்லிபுத்தூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
இதில் 17 சதவீதத்துக்கும் குறைவான ஈரப்பதம் கொண்ட நெல் மட்டுமே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. சன்ன ரக நெல்லுக்கு கிலோ ஒன்றுக்கு
அரசு ஊக்கத் தொகையுடன் ரூ.24.50-ம், மோட்டா ரக நெல்லுக்கு ரூ.24.05-ம் வழங்கப்படுகிறது. நெல் கொள்முதலுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதில் விவசாயிகள், வேளாண் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
நெல் தரக்கட்டுப்பாட்டு அலுவலா் முத்துச்செல்வம், கொள்முதல் அலுவலா் ராஜவேல், எழுத்தா் ராமராஜ் ஆகியோா் ஏற்பாடுகளைச் செய்தனா்.
வத்திராயிருப்பு, கான்சாபுரம், ராமசாமியாபுரம், சுந்தரபாண்டியம், தம்பிபட்டி பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.