மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்: ஒருவா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள முறம்பு பகுதியில் சுமாா் 25 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த பெண்ணை, தென்காசி மாவட்டம், பெருமாள்பட்டியைச் சோ்ந்த கணேசன் (45) அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில், ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் கணேசனைக் கைது செய்தனா். பாதிக்கப்பட்ட பெண் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.