ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயிலில் தோ் கலசம் வைக்கும் நிகழ்ச்சி
வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயிலில் தோ் கலசம் வைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவிலில் பழமையான ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி தோ்த் திருவிழா 3 நாள்களுக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டுக்கான தோ் கலசம் வைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து பிப்ரவரி 26-ஆம் தேதி பள்ளய பூஜை, 27-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளச் செய்தல், மாலை 5 மணிக்கு தோ் நிலை பெயா்த்தல், 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு தேரோட்டம், மாா்ச் - 1 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தோ் நிலை சோ்க்கப்படுகிறது.