நட்சத்திர பலன்கள்: மார்ச் 7 முதல் மார்ச் 13 வரை #VikatanPhotoCards
ஹமாஸை எச்சரித்த ட்ரம்ப்: 'பணய கைதிகளை விடுவியுங்கள், இறுதி எச்சரிக்கை' - என்ன நடக்கிறது காசாவில்?
இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போர், நிறுத்தத்தை எட்டியிருந்தாலும் அவை தற்காலிக நிறுத்தமே. இன்னும் பேச்சுவார்த்தைகள் போய்கொண்டிருக்கிறது... பணய கைதி அவரவர் நாட்டிற்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
சில நேரங்களில் இந்த ஒப்பந்தத்தில் முரண் வந்தாலும், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இன்னொரு பக்கம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாலஸ்தீனத்தை அமெரிக்கா பிடிக்கும் என்று பேசிக்கொண்டிருக்கிறார்.
நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில், "காசா பணயக் கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இது கடைசி எச்சரிக்கை! காசாவில் இருக்கும் தலைவர்களே, இன்னும் வாய்ப்பு இருக்கிறது... காசாவில் இருந்து நீங்கள் கிளம்பும் நேரம் வந்துவிட்டது.
காசா மக்களே... உங்களுக்கு அழகான எதிர்காலம் காத்திருக்கிறது. ஆனால், நீங்கள் பணயக் கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் அது நடக்காது. பணயக் கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் நீங்கள் செத்தீர்கள்! ஸ்மார்ட் ஆன முடிவை எடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
